னும் தொடர்கொண்டு, “தலைவி கூற்று,” எனக் கருதக் கிடக்கின்றது. ஆகவே, மாலை கண்டு மயங்கிய தலைவி தோழிக்குச் சொல்லியது, என்பது போதரும். (7) பிரிந்தவர் மேனிபோற் புல்லென்ற வள்ளி பொருந்தினர் மேனிபோற் பொற்பத் - திருந்திழாய் ! வானம் பொழியவும் வாரார்கொ லின்னாத கானங் கடந்துசென் றார். [இதுவு மது.] (பத.) திருந்து இழாய் - செப்பமான அணிகலன்களை யணிந்துள்ள பெண்ணே !, பிரிந்தவர் - தலைவரைப் பிரிந்த தலைமகளிரின், மேனி போல் - வடிவம் போல, புல் என்ற - பொலிவின்றிக் காணப்பட்ட, வள்ளி - கொடிகள், பொருந்தினர் - தலைவரோடு கூடி வாழும் தலைமகளிரின், மேனிபோல் - வடிவம்போல, பொற்ப - பொலிவு பெறும்படி, வானம் பொழியவும் - மழை பெய்தலைச் செய்தும், இன்னாத - கொடிய, கானம் - காடுகளை, கடந்து - தாண்டி, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வாரார் கொல் - வரமாட்டாரா ? (என்று தோழி தலைவியை வினவினள்.) (ப-ரை.) துணைவரைப் பிரிந்தார் மேனிபோலப் புற்கென்ற வள்ளிகள், துணைவரோடு பொருந்தி யிருந்தார் மேனிபோலப் பொலிவு தோன்றும்வகை வானம் பொழியவும் வாரார் கொல்லோ? திருந்திழாய் ! இன்னாத கானங்களைக் கடந்து சென்றார். (விரி.) திருந்திழை - வினைத்தொகை யன்மொழி. இச்செய்யுளின் பொருட்போக்கும், வினவும் நேர்மையும் தலைவியின் கூற்றாமோ என ஐயுறச் செய்கின்றன. கொல் - ஐயவினாப் பொருள்தரு மிடைச் சொல். வருவர் வயங்கிழாய் வாளொண்க ணீர்கொண் டுருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேற் பைங்கொடி முல்லையவிழரும் பீன்றன வம்ப மழையுறக் கேட்டு.
|