ஓல்லென: விரைவுக்குறிப்பிடைச்சொல். நாடன் தன் - தன்: சாரியை, சொல்ல: செய என் வாய்ப்பாட்டு வினையெச்சம்; இது சொரியும் என்பதனைக் கொண்டு முடிந்தது; காரணப் பொருட்டில் வந்தது. தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல். 8. கருங்கைக் கதவேழங் கார்ப்பாம்புக் குப்பங் கி................க் ...கொண்...................................கரும் பெருங்கன் மலை நாடன் பேணி வரினே சுருங்கு மிவளுற்ற நோய். (சொ-ள்.) கருங்கை கதம் வேழம். வலிய கைகளையுடைய சினம் பொருந்திய யானைகள்; கார் பாம்புக்கு பங்கு - கரிய மலைப் பாம்புகளின் பக்கத்தில்; இ.......க் கொண்............... கரும் - பெரியகைகளால் தேனீக்களை யோட்டித் தேன் கூட்டினை யெடுத்து அதன் கண்ணுள்ள இனிய தேனையுண்ணும்; பெருங்கல் மலைநாடன் பேணி வரின் - பெரிய கற்களையுடைய மலை நாடனாகிய தலைவன் இவளை விரும்பி நாடோறும் வந்தால்; இவள் உற்ற நோய் சுருங்கும் - இவள் கொண்ட காமநோயானது தணியும், (என்று தோழி செவிலியிடம் கூறினள்). 2 ஆம் அடி (கிருங்கைக்கொண் டோச் சியிறா லின்றேனுகரும்) என்று கொண்டு பொருள் எழுதப்பட்டது. (வி-ம்.) தலைவி வேறுபாட்டிற்குக் காரணம் வேறொன்றுமில்லை. ஒரு தலைவனைக் காதலித்து அவன் வாராமை குறித்து உடல் மெலிந்து வருந்துகின்றாள்; அத்தலைவன் நாடோறும் வந்து இவளுடன் கலந்தால் இவள் நோய் நீங்கும்; அவனை நினைந்து உடல் மெலிகின்றாள் என்று குறிப்பாலுரைத்தாள். இவ்வாறு உரைக்கவே செவிலி பாங்கியைத் தொடுத்து வினவுவாள்; காதலன் யார்? அவனைக் காதலித்ததற்குக் காரணம் யாது? அவன் எவ்வாறு இவட்குக் காதலனானான்? என்று.
|