வினாக்கட்குத் தகுதியாக பூத்தருபுணர்ச்சி, புனறருபுணர்ச்சி, களிறுதருபுணர்ச்சி என்ற மூன்றிலொன்றைப் படைத்து மொழிந்து அறத்தொடு நிற்பாள். அவனுக்கே மணமுடிப்பது அறமாகும் என்றும் வற்புறுத்துவாள். இதுவே அறத்தொடு நிலையாகும்.வரைதல் பயன். யானை கரும்பாம்புகளின் பக்கத்திற் றுணிவாக நின்று தேன் கூட்டினையழித்துத் தேனுகர்ந்தது போல நம் குறவர்குடி வேடர்கட்கு அஞ்சாது இரவில் வந்து இவளைக் கூடிக்கலந்து இன்பம் நுகர்ந்து செல்கின்றான் எனக் கள வொழுக்கம் உள்ளுறையுவமை வழித் தோன்றுவதும் காண்க. இது. தொல். கள. சூத். 24. முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப், புரைதீர் கிளவி தாயிடைப்புகுப்பினும் என்பதன்பாற்படும். (இ-பு.) கருமை + கை - கருங்கை, இருமை + கை - இருங்கை; பண்புத்தொகைகள். பெருமை + கல் - பெருங்கல் என்பது மது. பேணி, வரின் நோய் சுருங்கும் என வினை முடிவு செய்க. பேணி: செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். வரின் செயின் என்ற வாய்பாடு சுருங்கும், செய்யும் என் வாய்பாடடு வினைமுற்று. வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல். 9. காந்த ளரும்புகை யென்று கதவேழம் ஏந்தன் மருப்பிடைக் கைவைத் தினனோக்கிப் பாய்ந்தெழுந் தோடும் பயமலை நன்னாடன் காய்ந்தான்கொ னங்கட் கலப்பு. (சொ-ள்.) கதம் வேழம் - சினம் பொருந்திய யானையானது; காந்தள் அரும்புகை என்று - செங்காந்தள் மலரைக் கொடிய தீ யென்று கருதி; ஏந்தல் மருப்பிடை கை வைத்து - உயர்ந்த தன் கொம்புகளினிடையே துதிக்கை உயர்த்தி நீட்டிக்கொண்டு; இனன் நோக்கி பாய்ந்து எழுந்து ஓடும் - தன் இனமாகிய யானைக் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து ஓடுகின்ற; பயம் மலை நல் நாடன் - அச்சத்தைத்தரும் மலைகளை யுடைய நல்ல நாடனாகிய நந்தலைவன்; நம் கண் கலப்பு காய்ந்தான்
|