பக்கம் எண் :

13


தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

10. பொன்னிணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன்
மின்னி னனையவே லேந்தி யிரவினுள்
இன்னே வருங்கண்டாய் தோழி யிடையாமத்
தென்னை யிமைபொரு மாறு.

(சொ-ள்.) தோழி - என்னுயிர்ப் பாங்கியே; பொன் இணர் வேங்கை புனம் சூழ் மலைநாடன் - பொன் போன்ற மலர்கள் பொருந்திய வேங்கை மரங்களையுடைய புனம் சூழ்ந்திருக்கும் மலைநாட்டை யுடையவனாகிய தலைவன்; மின்னின் அனைய வேல் ஏந்தி - மின்னலைப்போல ஒளிவீசும் வேற்படையைக் கையில் ஏந்தி; இரவினுள் இடையாமத்து இன்னே வரும் - இரவின் நடுச்சாமத்தில் இப்போதே வருவான், இமை பொரும் ஆறு என்னை - என் கண்ணிமை யொன்றோடொன்று பொருந்தியான் உறங்குமாறு எங்ஙனம் (அவன் வருவதை நினைந்து கவலையுறுகின்றேன் என்றாள்)

(வி-ம்.) இணர் - பூங்கொத்து. இது விரிந்த மலருக்காயிற்று. வேங்கை மலர் பொன் போன்றது. புனம் என்றது மலையைச் சூழ்ந்த காடுகளைக் குறித்தது. தோழி இரவுக் குறிநேர்ந்தவள் ஆதலால் தலைவியை யெழுப்புவதற்கு அவள் உறங்கும் இடஞ்சென்றாள். உறங்காது விழித்திருப்பது கண்டு ஏன் இவ்வாறு விழித்திருக்கின்றனை என வினவியபோது அவள் கூறியதாகக் கொள்க. தலைவன் தனியனாய்க் கையில் வேலேந்தி நள்ளிருளில் வருவதை யெண்ணினேன். புலி கரடி முதலிய பொல்லா விலங்கினங்களும் அரவும் பேயும் வழங்கும் வழிகளைக் கடந்தன்றோ வரல்வேண்டும்? அவனுயிர்க்கு இடையூறு நேரினும் நேருமே! நேர்ந்தால் என்னுயிர் நிற்குமோ? இத்தகைய களவொழுக்கம் என்னாலன்றோ நேர்ந்தது; என்று எண்ணி எண்ணிக் கண்ணிமை சிறிதும் பொருந்தாது கலங்குகின்றேன். இதனை நீக்கும் சூழ்ச்சியை ஆய்ந்து விரைவிற் செய் எனக் குறித்தாளாயிற்று. அவன் கைப்பற்றிய வேலால் வழியறிந்து வருகின்றான் என்பதை விளக்க ‘’மின்னின் அனைய வேலேந்தி’’