என்றார். தோழிசென்று தலைவியைக் கண்டவமையம் அரையிருள் ஆதலால் ‘’இன்னே வரும்’’ என்றாள். ‘’என்னை’’ என்பது எங்ஙனம் என்ற பொருளைத் தந்தது. கண்டாய்: முன்னிலையசை. ஆராய்வாய் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். (இ-பு.) இணர்: சினையாகுபெயர். பொன்னிணர்: உவமைத்தொகை. மின்னின்: இன்சாரியை. வரும்: செய்யும் என்னும் முற்று; ஆண்பாற்கு வந்தது, ‘தோழி’ அண்மை விளி, இயல்பாய் நின்றது. பொரும் பெயரெச்சம் ஆறு என்ற பெயர் கொண்டது. என்னை: வினாக்குறிப்பு. சூழ்மலை: வினைத்தொகை. இதுவு மது 11. எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூழி பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையு முறிகிளர் நன்மலை நாடன் வருமே யரிதுரைத்திவ் வில்லி னமக்கு. (சொ-ள்.) கேழல் - பன்றிகளானவை; எறிகிளர் கிளைத்திட்ட பூழி - கொம்புகளாற் குத்தியெழுப்பிய நிறைந்த புழுதியில்; பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும் - புள்ளிகள் விளங்கிய மயில்கள் விரும்பிப் படிந்து விளையாடும் இயல்புடைய, முறிகிளர் நன்மலை நாடன் - இலைமரங்கள் விளங்கும் நல்ல மலை நாட்டையுடையவனாகிய தலைவன்; இல்லில் நமக்கு அரிது உரைத்துவரும் - இம்மனையின்கண் நமக்கு அருமையாகச் சில சொற்கள் பேசி வருவான். (அவ்வரவு எனக்கு மிகவும் அச்சத்தை விளைக்கின்றது என்றாள்.) (வி-ம்.) எறிகிளர் கிளைத்திட்ட எனக்கூட்டப்பட்டது. எறிந்தபுழுதி, கிளர்ந்த புழுதி கிளைத்திட்ட புழுதி எனத் தனித் தனி கூட்டுக. பன்றி மண்ணைக் கொம்புகளாற் குத்தியெழுப்புவதும் புழுதியாக்குவதும் அப்புழுதியிற் படுத்துக் கிடப்பதும் இயற்கை. அது குறித்து ‘’கேழல் கிளைத்திட்ட பூழி’’ என்றார். இரவிற்பன்றிகள் படுத்திருந்த புழுதி நிறைந்த
|