ஏற்றினை யுணர்த்தியது. வேடர் அடிக்கும் சீழ்க்கையொலி கேட்டு மரையான் ஏறு ஓடுவது போல நீயும் இங்குக் கூறும் அம்பலும் அலரும் கேட்டு அஞ்சிப் பிரிகின்றாய் போலும்; இவ்வாறு பிரியின் தலைவி ஆற்றாளாதலாற் பிரிவு நினையற்க எனக்குறிப்பிற் கூறியதாயிற்று. மல்கின என்றிருப்பின் பொருள் சிறக்கும், ‘’மெல்கின’’ என்றிருப்பதால் அதற்குத் தக்கவாறு பொருள் கூறப்பட்டது. (இ-பு.) சூழ்பதுக்கை; விடுவில்: வினைத்தொகைகள். நெடுவிடை: பண்புத்தொகை. வடு என்பது உவமையாகு பெயராய்க் கண்ணினை யுணர்த்தியது. கண் என்பது கண்ணீரை யுணர்த்தியது இது இடவாகுபெயர். மெல்கின: பலவின்பால் வினைமுற்று. ஒருமைக்கு வந்தது; இது வழுவமைதி. 14. கதநாய் துரப்ப ....... ....... ....... ....... ....... ....... ....... யவிழும் புதன் மாறு வெங்கானம் போக்குரைப்ப நில்லா முதன் ....... ....... ....... (சொ-ள்.) கதம் நாய் துரப்ப - சினம் பொருந்திய நாய்கள் தொடர்ந்து செலுத்த; அவிழும் - விரிகின்ற; புதல் மாறு வெங்கானம் - புதர்கள் மாறுபடுகின்ற கொடிய சுரத்தின் வழியாக; போக்கு உரைப்ப - நீ பிரிந்து செல்வதை நான் கூற; நில்லா - நில்லாமற் கழல்கின்றன. (வளை) 15. ........ ....... ....... ....... ....... ....... ....... ....... கடுங்கதிர் வெங்கானம் பல்பொருட்கட் சென்றார் கொடுங்கன் மலை ....... ....... (சொ-ள்.) கடுங்கதிர் வெங்கானம் கொடிய சூரியன் கிரணங்களால் மிகவும் வெப்பமடையும் காட்டின் வழியாக; பல் பொருள்கண் சென்றார் - மிகுதியாகப் பொருளீட்டி வருதற் பொருட்டுப் பிரிந்து சென்ற நங்காதலர்; கொடுங்கல் மலை - வளைந்த கற்பாறைகளையுடைய மலை.
|