16. ....... ........ வுறையு மெல்லென் கடத்துக் கடுஞ்சின வேங்கை கதழ்வேழஞ் சாய்க்கு ....... ....... ....... ....... ....... ....... ....... நமர (சொ-ள்.) உறையும் மெல்லென் கடத்து - தங்கியிருக்கும் மெல்லிய காட்டுவழியில்; கடுஞ்சினம் வேங்கை கதழ் வேழம் சாய்க்கும் - மிகுந்த கோபத்தையுடைய புலிகள் வேகம் பொருந்திய யானையை யடித்துக் கொல்லும்; நமர் - நம்தலைவர். 17. கடமா விரிந்தோடுங் கல்லத ரத்த மடமா விரும்பிடி வேழ மரு ... ....... ....... ........ ண்ட வுண்கண் ணுணீர் ....... ....... ....... ....... (சொ-ள்.) கடமா இரிந்து ஓடும் கல் அதர் அத்தம் - கடமான் என்ற விலங்குகள் முரிந்து விரைந்து செல்கின்ற பரற்கற்களையுடைய வழிகள் பொருந்திய பாலைவனத்தில்; மடம்மா இரு பிடி வேழ மரு - இளமையான கரிய பெரிய பெண்யானைகளோடு ஆண்யானைகள் கூடும்; நீண்ட உண் கண்ணுள் நீர் நீண்ட மையுண்ட கண்களில் உள்ளிருந்து வரும் கண்ணீர்.
பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது 18. ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை யேமாண் சிலையார்க் கினமா விரிந்தோடுந் தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும். (சொ-ள்.) ஆமா - காட்டுப் பசுக்கள் (மரையா); சிலைக்கும் கதறுகின்ற (ஒலிக்கின்ற) ; அணிவரை ஆர் இடை - அழகிய மலையையடுத்த அருமையான வழியில்; ஏமாண் சிலையார்க்கு இனம்மா இரிந்து ஓடும் - அம்பும் மாட்சிமைப்பட்ட வில்லும் உடைய வேடர்களைக்கண்டு கூட்டமாகிய விலங்குகள் முறித்தோடுகின்ற;
|