இதுவு மது 19. அரக்கார்ந்த வோமை யரிபடு நீழற் செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும் பரற்கானம் பல்பொருட்குச் சென்றார் வருவர் துதற்கிவர்ந் தேறு மொளி. (சொ-ள்.) அரக்கு ஆர்ந்த ஓமை அரிபடு நீழல் - அரக்கினது நிறம் போன்ற செந்நிறம் பொருந்திய ஓமை மரத்தின் புள்ளிபட்ட நிழலில்; செருக்கு இல் கடுங்களிறு சென்று உறங்கி நிற்கும் - களிப்பில்லாத கொடிய யானைகள் போய் உறங்கிக்கொண்டு நிற்கும் இயல்பு பொருந்திய; பரல் கானம் - பருக்கைக்கற்களையுடைய காட்டு வழியாக; பல பொருட்குச் சென்றார் - மிகுந்த பொருளீட்டுவது கருதிச்சென்ற நம் தலைவர் நுதற்கு இவர்ந்து ஏறும் ஒளி - நினது நெற்றியில் பசலை நீங்கி ஒளிபடர்ந்து ஏறுகின்றது ஆதலால்; வருவர் - இப்போதே வந்து சேர்வர் (அது குறித்து வருந்தாதே என்று வற்புறுத்தினள் தோழி) (வி-ம்.) ஓமை மரம் செந்நிறமுடையது ஆதலால் ‘’அரக்கார்ந்த’’ என்ற அடைமொழி கொடுத்தார். ஓமை மரம். பாலை நிலத்திற்குரிய மரம். அம்மரம் காய்ந்து வற்றிச் சில இலைகளுடன் நிற்கிறது என்பது தோன்ற ‘’அரிபடுநீழல்’’ என்றார் வெயிலும் நிழலும் இடையிடையே விரவி நிற்கும் நிழல் அது. பாலை வனத்தில் வந்தலைந்த யானைகள் மதமடங்கி வலியிழந்துபோம் என்பது குறித்து ‘’செருக்கில்’’ களிறு என்றார். யானைகள் படுத்து உறங்கத்தக்க நீழலையுடைய மரங்கள் ஒன்றும் இல்லாததால் அவ்வோமை மரத்தினடியில் நின்றே யுறங்கும் எனக் கூறினர். இத்தகைய பாலை நிலவழியிற் பிரிந்து சென்றவர் விரைவில் வருவர் அதற்கு அறிகுறியாக இந்நாளில் நெற்றியிலுள்ள பசலை நீங்கி ஒளிபடர்ந்து தோன்றுகிறது; உறுதியாக என் கூற்றை நம்புக என்று வற்புறுத்தினள் என்பது. (இ-பு.) நீழல் - நீட்டல் விகாரம்; நிழல் என்பது செய்யுளில் ஓசையை நிறைப்பதற்கு விகாரப்பட்டது. கடுமை + களிறு
|