= கடுங்களிறு; பண்புத்தொகை. பரற் கானம்: இரண்டானுருபும் பயனும் தொக்கதொகை. நுதற்கு - உருபு மயக்கம். ஏழாம் வேற்றுமையுருபு வரவேண்டிய இடத்தில் நான்கன் உருபு நின்றது. 20. ........ ........ ........ ........ ....... ........ ......... வீழ்க்கு மோவாத வெங்கானஞ் சென்றார் ........ .........வார் வருவார் நமர். (சொ-ள்.) ஓவாத வெங்கானம் சென்றார் - ஒழியாத வெப்பத்தை யுடைய காட்டின் வழியாகப் பிரிந்து சென்ற நம் தலைவர்; நமர் வருவார் - நம் தலைவர் இனி வருவார் (ஆதலால் வருந்தாதே என்றனள்.)
பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது 21. ஆந்தை குறுங்கலி கொள்ள நம் மாடவர் காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின் னேந்த லிளமுலை யீரெயிற்றா யென்னெஞ்சு நீந்து நெடுவிடைச் சென்று. (சொ-ள்.) நம் ஆடவர் - நமது தலைவர்; ஆந்தை குறுங்கலி கொள்ள ஆந்தை யென்ற பறவைகள் மரப்பொந்துகளிலிருந்து சிறிய ஒலி செய்யும்படி; கதிர் காய்ந்து தெறூஉம் கானம் - சூரியன் வெயில் சுட்டு வருத்துகின்ற காட்டின் வழியாக; கடந்தார் பின் - பிரிந்து சென்றவர்க்குப் பின்னே; என் நெஞ்சு நெடு இடை சென்று நீந்தும் - என் மனமானது நீண்ட வழிகளிற் சென்று நீந்துகின்றது; ஏந்தல் இளமுலை ஈர் எயிற்றாய் - பருத்த இளமுலையையும் குளிர்ந்த பற்களையுமுடைய பாங்கியே! (நான் என்ன செய்வேன் என்றாள்) (வி-ம்.) எயிற்றாய்! நம்மாடவர் சென்றவர்பின் என் நெஞ்சு சென்று நீந்தும் எனக் கூட்டுக. ஏந்தல் இளமுலை ஈரெயிற்றாய் என்றது, நீயும் இளமைப் பருவமுடையவள்; காதல்
|