பக்கம் எண் :

28

எயிறரும்பிற்று; குருந்தரும் பிற்று என்பது குறிப்பால் வருவித்து ஆதலால் வருவர் என முடிவு செய்க. பைதல் நோய் என்பது பசலை பாய்தல் ஆகிய ஒரு நோய்; காமவிகாரத்தால் வடிவு மாறுபட்டுப் பசப்பாகத் தோன்றுவது உடல் மெலிவது ஆகிய பிணி என்று அறிக. முல்லையரும்புவதும் குருந்து அரும்புவதும் கார் காலத்தில் முல்லை நிலத்தில் நிகழ்வன.

(இ-பு.) கூரெயிறு: பண்புத்தொகை. கொடிமுல்லை; இரு பெயரொட்டுப் பண்பு. ஓரும்; அசைச்சொல். வாள் + தடம் + கண்ணாய் = வாட்டடங்கண்ணாய்; முன்னது உவமைத்தொகை, பின்னது பண்புத்தொகை. பருவரல் என்பது எதிர்மறைவியங்கோள். இது தொழிற்பெயராகவும் உடன்பாட்டு வியங்கோளாகவும் ஒவ்வோரிடங்களிற் பொருள் தரும். வருந்தற்க என்பது பொருள்.

இதுவும் அது.

26. குருதி மலர்த்தோன்றி கூர்முகை யீன
... ... ... சேவ லெனப்பிடவ மேறி
பொருதீ யெனவெருளும் பொன்னேர் நிறத்தாய்
அரிதவர் வாரா விடல்.

(சொ-ள்.) பொன் நேர் நிறத்தாய் - பொன்போன்ற உருவத்தை யுடைய தலைவியே! தோன்றி - செங்காந்தட் செடிகளின்; கூர்முகை - கூர்மையான அரும்புகள்; குருதி மலர் ஈன - குருதி போன்ற பூக்களைக் காட்ட ... ...சேவல் என (அப்பூக்களின் தோற்றத்தை) தன்னோடு போர் செய்யவரும் மாறுபட்ட சேவலென்று கருதி; பிடவம் ஏறி - பிடவஞ்செடியின் மேலேறி நின்று (உற்று நோக்கி) பொரு தீ என வெருளும் - சுடுகின்ற நெருப்பு என்று எண்ணி அஞ்சியோடுகின்ற (இயல்புடையது கானம்) அவர் வாரா விடல் அரிது - நம் தலைவர் வாராமலிருப்பது அருமையானது (வருவர் என்றாள்)

(வி-ம்.) தோன்றிமலர் குருதிபோலச் சிவப்பானது. அரும்புகள் மலர்ந்து நெருங்கிய தோற்றம் ஒரு சேவலின் கண்ணுக்குத் தன்னோடு பொரவருகின்ற மற்றொரு சேவல் போலத்தோன்றியது.