பக்கம் எண் :

30

28. ...... ....... ...... .......
...... பெய்த புறவிற் கடுமான்றே
ரொல்லைக் கடாவா ரிவர்காணின் காதலர்
சில் ........ ....... ......

(சொ-ள்.) பெய்த புறவில் - மழை பெய்த முல்லை நிலத்தில்; கடு மான் தேர் - வேகமாகிய பரிகள் பூட்டப்பட்ட தேரினை; ஒல்லை கடாவார் - விரைவிற் செலுத்துவார்; நின்காதலர் இவர் காண் - உனது காதலர் இவரே அறிவாயாக.

29. ....... ....... ...... குருந்தலரப்
பீடா ரிரலை பிணைதழுவக் - காடாரக்
கார்வானம் வந்து முழங் ... ... ...
....... ....... ......

(சொ-ள்.) குருந்து அலர - குருந்த மலங்களின் மலர்கள் மலர; பீடு ஆர் இரலை பிணைதழுவ - பெருமை பெற்ற ஆண்மான்கள் பெண்மான்களைக் கூடியின்பமுற; காடு ஆர கார் வானம் வந்து முழங் - காடுகள் நீர் நிறைந்து செழிக்கும்படி கரிய மேகங்கள் வந்து இடித்து மழை பொழிய.

30. ....... ....... ...... .......
...... ...... ....... .......
கொன்றை கொடுகுழ லூதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து.

(சொ-ள்.) கொன்றை கொடு குழல் ஊதிய கோவலர் - கொன்றைக் காயைத் துளைத்துக் குழலாகப்பண்ணி வாய்வைத்து ஊதி வருகின்ற ஆயர்கள்; மன்றம் புகுதரும்போழ்து - தம்பசுக்கள் நிற்கும் மன்றத்திற் புகுகின்ற காலமாகிய மாலையில்.

31. ....... ....... ...... .......
....... ...... ....... .......
........ ....... ....... வானம்
வந்து துளிவழங்கக் கண்டு.