(சொ-ள்.) வானம் வந்து துளி வழங்க கண்டு - மேகங்கள் விண்ணின் மேல் வந்து மழைத்துளிகள் பெய்வதை நோக்கி. 32. காரெதிர் வானங் கதழெரி சி .... ....... ....... ...... ....... ....லக மெழு நெஞ்சே செல்லாயாற் கூரெரி மாலைக் குறி. (சொ-ள்.) கார் எதிர் வானம் கதழ் எரிசி - மேகங்கள் கூடிய வானத்தின் நின்று நெருங்கிய தீப்பொறிகள் சிந்த; எழும் நெஞ்சே - எழுகின்ற மனமே; கூர் எரிமாலை குறி செல்லாய் - மிகுந்த தீப்போல வரும் மாலையைக் குறிப்பாய்; தலைவர் பாற் செல்வாயாக. ஆல் - ஆசை. 33. தளையவிழ் தே ....... ....... ...... ....... ....... ...... ....... உளையார் கலிநன் மாப் பூட்டி வருவார் களையாரோ நீயுற்ற நோய். (சொ-ள்.) தளை அவிழ் - கட்ட விழ்ந்த; உளை ஆர் கலி நன்மா பூட்டி வருவார் - பிடரிமயிர் தழைத்த நல்ல பரிகளைப் பூட்டித் தேரில் வரும் தலைவர்; நீ உற்ற நோய் களையாரோ - நீ யடைந்த காதல் நோயை நீக்காரோ? நீக்குவர் (வருந்தாதே என்றாள்) 34. முல்லை யெயிறீன ....... ....... ....... ....... ......ன மல்கிக் கடன்முகந்து கார்பொழியக் காதலர் வந்தா ருடனியைந்த தெ ....... ....... (சொ-ள்.) முல்லை எயிறு ஈன - முல்லைக்கொடிகள் மாதர் பற்களைப் போன்ற அரும்புகள் காட்ட; மல்கி - நிறைந்து; கார் கடல் முகந்து பொழிய - மேகங்கள் கடலின் நீரை முகந்து பொழிய; காதலர் வந்தார் - நம் காதலர் வந்தனர்; உடன் இயைந்த - நம் முடன் இசைந்த.
|