பக்கம் எண் :

32

35........ ....... ...... .......
....... ...... ரடைப் பால்வா யிடையர்
தெரிவிலர் தீங்குழ லூதும் பொழுதா
லரித

(சொ-ள்.) பால்வாய் இடையர் - பால் மணம் நீங்காத வாயையுடைய ஆயச்சிறார்; தெரிவிலர் தீங்குழல் ஊதும் பொழுது - பண்ணும் திறமும் அறியாராய் இனிமையான வேய்ங் குழலூதும் மாலைக்காலம். அரிது - அருமையானது.

தோழி பருவங்காடடித் தலைவர் வருவர் என வற்புறுத்தியாற்று வித்தல்

36. பிடவங் குருந்தொடு பிண்டி மலர
மடவ மயில் கூவ மந்திமா கூரத்
தடமலர்க் கோதையாய் தங்கார் வருவ
ரிடப மெனக் கொண்டு தாம்.

(சொ-ள்.) தடம் மலர் கோதையார்-வளைந்த மலராற்றொடுக்கப்பட்ட மாலை புனைந்தோய்! பிடவம் குருந்து ஓடு பிண்டி மலர-பிடவஞ் செடியும் குருந்த மரமும், அசோக மரமும் பூத்து நிற்க; மடவ மயில் கூவ-இளமையான மயில்கள் ஆடிக் கூவிமகிழ; மந்திமா கூர-மந்திகளும், விலங்கினங்களும் குளிரால் நடுங்க, இத்தகையகார் காலத்தில்; நங்காதலர்-நம்காதலர்; இடபம் என கொண்டு வருவர்-தம்மை ஒரு காளை என்று மனத்தின் மதித்துக் கொண்டு (மகிழ்ச்சியுடன்) வருவார்; தங்கார்-இனி யொருகணமேனும் ஆங்குத் தங்கியிரார். (என்று தோழி கூறினள்.)

(வி-ம்.) தடமலர்க் கோதையாய் என்பதற்கு பெருமையாகிய பல மலர்களையும் புனைந்த கூந்தலுடையாய் எனவும் பொருள் கூறலாம். கோதை - மாலைக்கும் கூந்தலுக்கும் பெயராம். பிடவம், குருந்து, அசோகம் இவைகள் கார்காலத்தில் மலரும் மலர்கள். ஆதலால் அவைகள் ‘’மலர’’ என்றார். கார்காலத்தைக் கண்டவுடன், மயில்கள் ஆடிக்கூவவும்; மந்தி