விலங்கினமும் மனழயினனைந்து மரங்களின் மீதும் மலத்தின் அடியிலும் நின்று குளிர் பொறுக்க மாட்டாமல் நடுங்கும். இச் செயல் அக்காலத்தினிகழுஞ் செயல்கள். இவை நிகழ்கின்றன ஆதலால் நங்காதலர் இப்போழ்தே வருவார் இது உறுதி என அறிதி என்று தேற்றினாள். ஏறுபோலப் பெருமித நடையுடன் வருவார்; வலிமையும் வீரமும் உடையவர், தளர்ந்து ஆங்குத் தங்கார், வாய்மை வழுவாதவர். குறித்த பருவம் இதுவே என்பது விளங்க ‘’இடபமெனக் கொண்டு தாம் தங்கார் வருவர்’’ என்றார், இடபம் என - கண்டோர் ஏறு என்று கூறும்படி, கொண்டு - நடைகொண்டு, வருவர் எனக் கூறினும் அமையும்.
(இ-பு.) ஓடு எண்ணுப் பொருளில் வந்தது. மலர, கூவ, கூர என்பவை செய என் வாய்பாட்டு வினையெச்சங்கள். தங்கார் வருவர் என்ற இரண்டு வினைமுற்றுக்களில் தங்கார் என்பது எச்சப்பொருளைத்தந்தது. தங்காமல் வருவார் என்பது பொருள். தாம்: அசை. தலைவர் அல்லது காதலர் என எழுவாய் வருவித்துக்கொள்க. முல்லை முற்றிற்று. 4. மருதம் பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனைநோக்கிக் கூறியது. 37. கழனி யுழவர் கலியஞ்சி யோடித் தழென மதவெருமை தண்கயம் பாயும் பழன வயலூரன் பாணவெம் முன்னர்ப் பொழெனப்பொய் கூறா தொழி. (சொ-ள்.) கழனி உழவர்கலி அஞ்சி ஓடி - வயலின் கண் உழுகின்ற உழவர்கள் ஆரவாரத்தைக் கேட்டுப் பயந்து விரைந்து சென்று; மதம் எருமை தழென தண் கயம் பாயும் - செருக்ககுடைய எருமை தழென ஒலியெழும் படி குளிர்ந்த
|