பக்கம் எண் :

34

தடாகத்தில் வீழும் இயல்புடைய; பழன வயலூரன் பாணமருத நிலங்களையும் வயல்களையும் உடைய தலைவன் விடுத்த பாணனே!; எம் முன்னர் - எங்கள் முன்னிலையில் நீ; பொழென பொய்கூறாது ஒழி - பொழென்ற ஒலியுடன் பொய்ம்மொழி கூறா திருப்பாய் (உண்மையே கூறு என்றாள்)

(வி-ம்.) பாணன் வந்து நந்தலைவர் இனிப்பரத்தையர் மனைக்கட் செல்லார். முன்னர்ச் சென்றதும் ஆடல் பாடல் விருப்பத்தாலேயன்றி வேறில்லை. உங்கள் மீது மிகுந்த அன்புடையார் எஞ்ஞான்றும் என்று பல பொய்யுரை புகன்றனன்; அதனைக்கேட்ட தலைவி சினந்து இனிப்பொய்யுரை கூறுவதை யொழித்து விடு என்று மறித்துக் கூறினள் எனக் கொள்க. செருக்குடைய எருமைகள் மாடுகளை அதடடும் உழவர்கள் ஒலி கேட்டு வெகுண்டுபோய்ச் சேற்றுத்தடாகத்தில் விழுவது போல எங்கள் குரல் கேட்டு வெகுண்டு போய்ப் பரத்தையர் சேரி சென்று காமந்துய்த்துத் தங்கியிருக்கின்றான் என உள்ளுறை காண்க. இவ்வியல்புடைய தலைவன் கூட்டம் இனி வேண்டாம் எனமறுத்தாள். உழவர் கலி என்பது மாடுகளை அதட்டி ஓட்டும் ஒலி.

(இ-பு.) தழென, பொழென என்பன ஒலிக்குறிப்பிடைச் சொல். மதம் + எருமை = மதவெருமை. மகரங் கெட்டு உடம்படு மெய்பெற்று முடிந்தது. பண்புத்தொகை, அல்லது இரண்டனுருபும் பயனும் தொக்க தொகை எனக்கொள்க. தண்கயம் பண்புத்தொகை. மைவிகுதி கெட்டுப்புணர்ந்தது. ஒழி: முன்னிலையேவ லொருமை வினைமுற்று.

பரத்தையர் சேரியிற் பயின்று வந்ததலைவனைப் புலந்து தலைவி கூறியது.

38. கயலினம் பாயுங் கழனி நல்லூர
நயமிலே மெம்மனை யின்றொடு வாரல்
துயிலி னிளமுலையார் தோணயந்து வாழ்கின்
குயி ....... ............. கொண்டு

(சொ-ள்.) கயல் இனம் பாயும் கழனி நல் ஊர - கெண்டை மீனினங்கள் துள்ளிக்குதிக்கும் வயல்களை யுடைய நல்ல மருத