பக்கம் எண் :

37

தனக்குத் தகுந்த பரத்தையரின்பத்தை நுகர்ந்து தம்மனைக்கு விரைந்து வந்தான் எனக்குறிப்புக் காட்டினள். வருவானோ வாரானோ என்ற ஐயம் தலைவிக்கு இருந்ததால் இதோ வருகின்றான் என உவகை விளையக் கூறினள். தலைவியின் ஊடல் நீக்குவதற்கும் அவன்மேல் அன்புடையளாக்குவதற்கும் தோழி இவ்வாறு கூறினள் எனக் கொள்க. தொட்டன்னவரி என்பது உவமையுருபு தொக்கு தொட்டவரி என நின்றதெனக் கொள்க. தொட்ட - தோண்டிய, பதித்த போன்ற வரி எனப் பொருள் கொள்க.

(இ-பு.) அடைகரை - வினைத்தொகை. கட்டு அலர் கண்ணி என்பதும் அது. கட்டு கண்ணி அலர் கண்ணி என்று பிரித்துக் கொள்க. முதுநீர் - பண்புத்தொகை.

வாயிலாக வந்த பாணனுக்குத் தோழி தலைவியின் பண்புகூறி
வாயில் மறுத்தது.

40. தாரா விரியுந் தகைவய லூரனை
வாரா னெனினும் வருமென்று - சேரி
புலப்படுஞ் சொல்லுமிப் பூங்கொடியன்னார்
கலப்படுங் கூடுங்கொன் மற்று.

(சொ-ள்.) தாரா இரியும் தகைவயல் ஊரனை - தாரா என்ற பறவைகள் பறந்து செல்லும் அழகுபொருந்திய வயல் சூழ்ந்த மருதநிலத் தலைவனைக் குறித்து; சேரி - சேரியிலுள்ள பரத்தையர் வாயினின்று; வாரான் எனினும் வரும் என்று புலப்படுஞ் சொல்லும் - வாராமல் இருப்பினும் வருகின்றான் என்று வெளிப்படுகின்ற சொல்லும்; இப்பூங் கொடியன்னார் - இப்பூங் கொடியைப் போன்ற எம் தலைவியின்; கலப்பு அடும் - கூட்டத்தைக் குலைக்கும்; கூடும் கொல் - அவள் தலைவனுடன் கூடுவாளோ? எவ்வாறு கூடுவாள். (இனி எம் தலைவி புலவி நீங்கிக் கூடாள் எனத்தோழி மறுத்தாள்.)

(வி-ம்.) தாரா என்பது மருத நிலத்துத் திரியும் பறவைகளில் ஒன்று; அவை ஓரிடத்திராது பறந்து பலபல வயல்களுக்குச் செல்லும்; அவ்வியற்கையையுடைய மருதநிலம் என்பது தலைவனும்