பக்கம் எண் :

42

தாமரைப்பூந்துறையூரனை’’ என்றாள். பரத்தையர் தம்மை யலங்கரித்தலே இயற்கையாகக் கொண்டவர் என்பது விளங்க ‘’தகையியலார்’’ என்றாள். பிறர் மகளிர் என்றது தன்னையே தலைவி கூறியதாகக் கொள்க. என்னுடைய அறியாமையை அப்பரத்தையர் தம்பால் இருப்பதாகக் கூறி என்னை அயலொருத்தியாகவும் என்மனைக்கு வந்தார் எனவும் கூறி எம் தலைவனோடு பிணங்குகின்றார் எனக்கேட்டேன். பரத்தையர் எம் தலைவனை இவவாறு கூறிப் புலப்பதற்குக் காரணம் அவர் அப்பரத்தையர் மேல் வைத்த அன்பன்றோ? அத்தகைய தலைவர் என் மனைக்கு வருவது தகவோ? பரத்தையர் சேரியிற் பயின்று திரிவது தான் பெருமையாம். நீயும் அவரும் பரத்தையர் சேரியில் வதிந்து வாழ்வதனைப் பல நாளாக நான் அறிவேன். இனி அவர் கூற்றினை விடுத்து வேறு கூறுக என்று வாயில் மறுத்தாளெனக் கொள்க. நந்தலைவர் புதிய புதிய பரத்தையரை நாடிச் செல்ல ஒவ்வொரு பரத்தையும் அவர் என் மனைக்கு வந்தனர் என ஐயங்கொண்டு அவருடன் பிணங்குகின்றனராம். இதனை நீயறிவாய் என்பது குறிப்பு.

(இ-பு.) அவிழ் தாமரை, அவிழ் கோதை என்பன வினைத் தொகைகள். இருப்பர் என்பது முற்றெச்சம். பூந்துறை, கோதைத்தகை இரண்டனுருபும் பயனும் தொக்கதொகை. புலப்பர்: பலர் பாற்படர்க்கை எதிர்கால வினைமுற்று.

வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது

44. தண்டுறை யூரன் றடமென் பணைத்தோளாய்
வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்து
கோல வனமுலையும் புல்லினா னென்றெடுத்துச்
சாலவும் தூற்று மலர்.

(சொ-ள்.) தடம் மென் பணைதோளாய் - அகன்ற மெல்லிய மூங்கில் போன்ற தோளுடைய பாங்கியே!, தண்துறை ஊரன் - குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய மருத நிலத்தலைவன் (ஆகிய நம் தலைவன்) வண்டு ஊது கோதைவகை நாடி கொண்டு இருந்து - வண்டுகள் மொய்த்திசை பாடுகின்ற கூந்தலையுடைய