பரத்தையின் திறத்தினை ஆராய்ந்து கொண்டு பரத்தையர் சேரியில் இருந்து; கோலவன முலையும் புல்லினான் என்று - சந்தனக்கோலமெழுதிய அழகிய கொங்கையுடையாளொருத்தியையும் மணந்தான் என்று; சாலவும் எடுத்து அலர் தூற்றும் மிகவும் உயர்த்திப் பழிச்சொற் கூறுகின்றது (பரத்தையர்சேரி) (எவ்வாறு வர வேற்பேன் தலைவரை எனவாயில் மறுத்தாள்). (வி-ம்.) பாங்கி ‘’நம் தலைவன் பிழை பொறுத்துக் கூடி வாழ்க. அவரை வரவேற்க வேண்டும்’’ என்று கூறினள்: அதற்கு மாறாகப் பரத்தையர் சேரியிற் பல நாட்டங்கி பரத்தையர் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து ஓர் அழகிய பரத்தையை யணைந்து வாழ்கின்றான் என்று பரத்தையர் சேரிமுழுவதும் அலர் தூற்றுகின்றதே, அத்தகைய புறத்தொழுக்க முடைய தலைவனுடன் நான் கூடி வாழ்வது எங்ஙனம், பரத்தையர் சேரிக்கே செல்லுமாறு கூறிவிடு, நான் அவர் முகம் நோக்கி வரவேற்கும் பண்புடையேனல்லன் என வாயில் மறுத்தாள் எனக் கொள்க. (இ-பு.) தண்மை + துறை = தண்டுறை மை விகுதி கெட்டு வருமொழித் தகரமெய் டகரமெய்யாகத் திரிந்து நின்றது. பண்புத்தொகை. வண்டு + ஊது = வண்டூது. இது குற்றியலுகரங்கெட்டுப் புணர்ந்தது. பணைத்தோளாய் உவமைத்தொகை. தடம், மென்மை, தோளுக்கு அடை மொழிகள். வண்டூது கோதை, கோலவனமுலை இவைகள் அன்மொழித் தொகைகள் எனக்கொள்க. வாயிலாக வநத பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது 45. மூத்தே மினிப்பாண முன்னாயி னாமிளையேம் கார்த்தண் கலிவய லூரன் கடிதெமக்குப் பாத்தில் பயமொழி பண்பு பலகூறி நீத்த லறிந்திலே மின்று. (சொ-ள்.) பாண - பாணனே! முன் இளையேம் ஆயினாம் - நம் தலைவனுக்கு முன்னாளில் இளமைப் பருவமுடையோமாய் நாமிருந்தோம் ஆதலால் வாழ்க்கைத் துணையாயினோம்; இனி
|