பக்கம் எண் :

45

இதுவும் அது

46. கயநீர்பாய்ந் தோடுங் காஞ்சிநல் லூரன்
நயமே பலசொல்லி நாணினன் போன்றான்
பயமில்யாழ்ப் பாண பழுதாய கூறா
தெழுநீபோ நீடாது மற்று.

(சொ-ள்.) பயம் இல்யாழ் பாண! ஒருபயனும் இல்லாத யாழைக் கையில் தாங்கிய பாணனே! கயம் நீர் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன் - பொய்கை நீர்பரந்து விரைந்து ஓடுகின்ற காஞ்சி மரங்கள் நிறைந்த நல்ல மருதநிலத் தலைவன் (எம் தலைவன்); நயமே பலசொல்லி நாணினன் போன்றான் - அந்நாளில் இனிமையான பல சொற்களைக் கூறி என்னை மணந்து இந்நாளில் எம்மனைக்கு வருவதற்கு நாணியவன் போல மறைந்திருக்கின்றான்; பழுது ஆய கூறாது - வீணான சொற்களை எம்பாற் கூறாமல்; நீ நீடாது எழு போ - நீ நீடித்திராது எழுந்து விரைவிற் போவாய் (என்றாள்).

(வி-ம்.) ‘’பயமில்’’ என்பதைப் பாணனுடன் சேர்க்க. பயமில் பாண என்றது, அறம் பொருள் இன்பம் என்ற பயனொன்றும் குறியாது வறிதே யலைந்துதிரியும் பாணனே எனத்தலைவி சினத்தாற் கூறியதாகக் கொள்க. குளத்துட் பெருகிக்கிடந்த நீர் மடைவழியே சென்று காஞ்சி மரத்தின் வழியாக வயலிற் பாயும் ஊரன் என்றது, தலைவன் செல்வப் பெருக்கமெல்லாஞ் சிறிது சிறிதாகப் பாணன் வழியாகப் பரத்தையர்பாற் சேர்வதைக் குறிப்பிற் காட்டியதாகக் கொள்க. அணங்கே! அமிழ்தே! ஆருயிரே! நின்னை யான் பிரிந்தாற்றுவனோ? என் காதல் நோய் தீர்க்கு மருந்தன்றோ? உன்னைக்காணாதபோது என் உயிர் நிற்குமோ? என்று தலைவன் இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்துழிக் கூறிய சொற்களை மனத்துட் கொண்டு ‘’நயமே பல சொல்லி’’ என்றாள். ‘’நாணினன் போன்றான்’’ என்றது நாணியவர்கள் முகத்தில் விழிக்காது மறைந்து நிற்பது போல மறைந்திருந்து உன்னை வாயிலாக விடுத்தான் என்பது; இதனால் அவன் புறத்தொழுக்கம் உடையவன் என்பதும் உண்மையில்லாதவன்