பக்கம் எண் :

46

என்பதும் பாணற்கு உணரத்தினாளாயிற்று. எம் தலைவன் இயற்கை இவ்வாறிருக்க நீ அவனைக் குறித்துப் புகழ்வது பழுதாகும். ஆதலால் அத்தகைய சொற்களை இனிமேலும் கூறாதெழுந்து விரைந்து செல் என்று வாயில் மறுத்தாளாயிற்று.

(இ-பு.) கயநீர் ; ஏழனுருபும் பயனும் தொக்க தொகை. நயமே, இதில் ஏகாரம் தேற்றம். நாணினன் போன்றான்: இரண்டாம் வேற்றுமைத் தொகை. மற்று - அசை.

இதுவும் அது

47. அரக்காம்ப றாமரை யஞ்செங் கழுநீர்
ஒருக்கார்ந்த வல்லி யொலித்தாரக் குத்துஞ்
செருக்கார் வளவய லூரன்பொய்ப் பாண
விருக்க வெம்மில்லுள் வரல்

(சொ-ள்.) அரக்கு ஆம்பல் - செங்குமுதமும்; தாமரை - செந்தாமரை வெண்டாமரையும்; அம்செங்கழுநீர் - அழகிய செங்கழுநீரும்; ஒருக்கு ஆர்ந்த அல்லி - ஒன்றாக நிறைந்த அல்லியும் (ஆகிய இவைகளெல்லாம்) ஒலித்து ஆர குத்தும் - தழைத்து நெருங்கி ஒன்றோடொன்று குத்திக்கொள்ளும் இயல்புடைய; செருக்கு ஆர் வள வயல் ஊரன் - களிப்புத்தரும் வளம் நிறைந்த வயல் சூழ்ந்த மருத நிலத்தலைவனுடைய; பொய் பாண பொய்யுரை கூறும் பாணனே! இருக்க எம் இல்லுள் வரல் - நின் தலைவன் பரத்தையர் சேரியின் கண்ணே தங்குக; எம்மனைக்கு வாரற்க (என்றாள்).

(வி-ம்.) செங்குமுதம் தாமரை முதலிய கொடிகள் நீரின் முளைத்தெழுந்து தழைத்து ஒன்றோடொன்று குத்துஞ் செருக்குள்ள ஊரன் என்றது பரத்தையர் சேரியில் உள்ள பரத்தையர் ஒருவரோடொருவர் மோதிப் போரிட்டுக் கொள்ளுமாறு தலைவன் ஆங்குத் தங்கியிருக்கின்றனன் என்பதைக் குறிப்பாற் கூறியது எனக்கொள்க; செல்வமுடைய தலைவன் பரத்தையர் சேரிக்குச் சென்றால் பரத்தையர் ஒவ்வொருவரும்