பக்கம் எண் :

48

(வி-ம்.) கொக்கு ஆர் வளவயலூரன் என்றது கொக்கானது தக்கமீனை அற்ற நோக்கிப்பற்றுவதுபோலத் தலைவனும் பரத்தையரில் தக்கவரைப் கைப்பற்றக் கருதுகிறான் என்று குறிப்பிற் கூறியதாகக் கொள்க. குளிர்.......வனமுலை எனவே பரத்தையர் கொங்கையை யுணர்த்தியது. தளர் முலை..... அமைந்தார் என்றது. தலைவி தன்னைக் கூறியதாகக் கொள்க. பன்மையாகவும் படர்க்கையாகவும் கூறுவது வழு. ஆயினும் சினத்தாற் கூறுவதால் வழுவமைதியாயிற்று. ‘’உவப்பினும்’’ என்ற நன்னூற் சூத்திரவிதி (379) கொள்க. புல்லான் என்பது எச்சப்பொருளில் வந்தது. புல்லாமல் என்பது பொருள். புல்லான் வரல் எனக்கூட்டுக. வரல் என்பது எதிர்மறை வியங்கோள். ‘’மகனனல்’’ மக்கட்பதடி எனல் (திருக்கு) உடன் பாட்டிலும் எதிர்மறையிலும் வந்ததுபோல எதிர்மறையில் வந்தது. உத்தரம் - சேடம். மிச்சில் என்று பொருள் கொள்க. உண்டுகளித்த மிச்சம்போல இன்பம் நுகர்ந்து கழித்த மிச்சில் என்னுடல் என்றாளாயிற்று. வேண்டா என்பதனைச் செய்யா என்ற வாய்பாடாகக் கொண்டு வேண்டி எனப்பொருள் கொள்ளினும் அமையும்.

(இ-பு.) குளிர்சாந்தம்: வினைத்தொகை. புல்லான்: முற்றெச்சம்; அமைந்தார்: வினையாலணையும் பெயர்.

49. நாவாய் வழங்கு நளிதிரைத் தண்கடலுள்
ஓவா கலந்தார்க்கு மொல்லெ னிறாக்குப்பைப்
பாவாரஞ் சேர்ப்பாற் குரையாய் பரியாது
நோயா னுணுகிய வாறு.

(சொ-ள்.) நாவாய் வழங்கும் நளிதிரை தண் கடலுள் - மரக்கலம் செல்லும் செறிந்த திரைகளையுடைய குளிர்ந்த கடலினுள்; ஓவா கலந்து ஆர்க்கும் ஒல் இன் இறாகுப்பை - நீங்காமல் சேர்ந்து ஒல்லென ஒலித்துத்திரியும் இறவு மீன்களின் குவியல்; பாவாரம் சேர்ப்பற்கு - பரவிய கடற்கரையையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; நோயான் பரியாது நுணுகிய ஆறு உரையாய்