மடநாராய் இவை பண்புத்தொகைகள். கேள்: விகுதி குன்றிய ஏவலொருமை வினைமுற்று. இதுவும் அது 51. மணிநிற நெய்தன் மலர்புரையுங் கண்ணாய் அணிநல முண்டிறந்து ....ம் மருளா விட்ட துணிமுந்நீர்ச் சேர்ப்பற்குத் தூதோடு வந்த பணிமொழிப் புள்ளே பற (சொ-ள்.) மணிநிற நெய்தல் மலர் புரையும் கண் ஆய் - நில நிறம்பொருந்திய நெய்தற் பூப்போன்ற என் கண்போன்றவனாய்க்கூடி; அணிநலம் உண்டு இறந்து நம் அருளா விட்ட - அழகும் உடல்நலமும் கவர்ந்து பிரிந்து நமக்கு அருள் புரியாது மறந்து விட்ட; துணி முந்நீர் சேர்ப்பற்கு - மனத்துணிவுடைய கடற்கரைத் தலைவனுக்கு; தூதோடு வந்த பணிமொழிப் புள்ளே - (இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த அக்காலத்தில்) தூதாக வந்ததுபோலக் கானலுள் வந்திருந்த தாழ்ந்த குரலுடைய நாரையே; பற - இப்போது பறந்து செல்; (தலைவனையழைத்து வருவதற்கு என்றாள்). (வி-ம்.) கழிக்கரையின் கண்தோன்றிய நாரையை விளித்துப் புலம்பியதாகக் கொள்க. முன்னின்ற செய்யுளில் ‘’மட நாராய் கேள்’’ என்ற தலைவி அந்நாரையை நோக்கி நீ பறந்து சென்று தலைவனைக்கண்டு தூது சொல்லியழைத்துவா என்ற குறிப்புத் தோன்றக் கூறியதாகக்கொள்க. புள் என்பது பறவைகட்குப்பொதுப் பெயரெனினும் நெய்தல் திணையில் வந்ததாலும் முந்திய கவியில் நாரை என்று சுட்டிக் கூறியதாலும் நாரையெனப் பொருள் கொள்ளப்பட்டது. தன் கண்ணினைத்தானே சிறப்பித்தல் பெருமை யன்று என்னினும் தன்காதலன் சிறப்புத் தோன்றத்தன் கண்களையும் சிறப்பித்தாள் என்று கொள்க. நீல நிறம் பொருந்திய நெய்தல் மலர்போன்ற என் கண்களைப் போலவே நான் கருதினேன் என்காதலனை. அவ்வாறு என்னாற் போற்றப்பட்ட காதலன் என்னை விட்டுப்பிரிந்தான். பிரிவாற்றாமையால்
|