பக்கம் எண் :

54

(இ-பு.) அன்னையும் : இதில் உம்மை உயர்வு சிறப்பு. கடிந்தாள் - காலவழுவமைதி. செய்கம்: தன்மைப் பன்மை எதிர் கால வினைமுற்று. க் என்ற மெய் எதிர்காலங்காட்டும் இடை நிலையாகக் கொள்க. பாடுகம், ஆடுகம் என்பனபோன்றது. நினையான்; முற்றெச்சம், உரையேனோ: இதில் ஓகாரம் ஐயப்பொருளில் வந்தது.

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித்தலைவி தோழிக்குக் கூறியது.

53. அலவன் வழங்கு மடும்பிரி ரெக்கர்
நிலவு நெடுங்கான னீடார் துறந்தார்
புலவுமீன் குப்பை கவருந் துறைவன்
கலவான்கொ றோழி நமக்கு

(சொ-ள்.) அலவன் வழங்கும் அடும்பு இமிர் எக்கர் - நண்டுகள் போக்கும் வரவுமாகப் பயில்கின்ற அடம்பங் கொடிகள் நிறைந்த மணல் மேட்டில் உள்ள; நிலவு நெடுங்கானல் - நிலாப் போன்ற நீண்ட மணற்பரந்த கானலில்; நீடார் துறந்தார் - நீண்டகாலத்தங்கியிராது அக்கானலை விடுத்து நீங்கிச்சென்ற பரதவர் எல்லாரும்; புலவு மீன்குப்பை கவரும் துறைவன் - புலால் நாற்றத்தையுடைய பல மீன் குவியலைக் கவர்ந்து வரும் வளம் பொருந்திய - நெய்த னிலத்தலைவன் (நந்தலைவன்) நமக்கு கலவான் சொல் - நம்பால் இனிக் கூடானோ (கூடுவனோ கூறுக என்றாள்.)

(வி-ம்.) நண்டுகள் கடல் அலையாலடிபட்டு வருந்தி மணன் மேட்டுக்கு வருவதும் ஆங்கு மக்கள் வரவு கண்டு கடலிலும் மணலிலும் ஒளிக்கப் போவதுமாக அடிக்கடி பயிலுவதால் ‘’அலவன் வழங்கும் எக்கர்’’ என்றார். அடும்பு - அடம்பு; இது நெய்தனிலத்துள்ளஒரு கொடி என்பர். நிலவு கானல் - நிலாப் போலத்தோன்றும் கானல்; நெடுங்கானல் - நெடுமையாகிய கானல் எனப்பொருள்கொள்க. கானல் என்பது இங்குக்கழிக் கரையிலுள்ள சோலையைக் குறித்தது. மீன் பிடிப்பவர்கள் யாவரும் வந்து கானலிற் படுத்துறங்குவர் என்பதும் அவர்களில் வைகறையில் எழுந்து சென்று வள்ளத்திலேறி