பக்கம் எண் :

55

வலை வீசியவர்க்கே மீன்கள் குவியலாகக் கிடைக்கும என்பதும், அயர்ந்து நெடிது நேரம் உறங்கியவர்க்கு மீன்கள் அகப்படுவது அருமை என்பதும் நீடார் துறந்தார் புலவுமீன் குப்பை கவரும்’’ என்பதனால் அறியலாம். நீடார் துறந்தார் என்பது நெடு நேரம் உறங்காது கானலை விட்டு நீங்கியபரதவர் எனப் பொருள் கொள்ளலாயிற்று. துறந்தவர் புலவுமீன் கவர்ந்து வருவது போல நம்மைவிட்டுத் துறந்தவரும் பொருட்குவியல் கொண்டு வருவார் என்பது குறிப்பு. நான்விரைவில் பொருட் குவியல் கொண்டு வருவார் எனத்துணிகின்றேன் நின் கருத்து யாது என வினவுவாள் ‘’கலவான் கொல்’’ என ஐயவினா நிகழ்த்தினாள். கலவான் - பகைவன்; நமக்குக் கலவான் கொல் - நமக்குப்பகைவனோ? இவ்வாறு நீட்டித்துப் பிரிந்தனனே எனக் கொள்ளினும் பொருந்தும்.

(இ-பு.) இமிர் எக்கர்: வினைத்தொகை. நிலவு நெடுங்கானல்: முன்னது உவமைத்தொகை. நீடார் துறந்தார்: முற்றெச்சம். கொல்: ஐயப்பொருள் தந்தது. நமக்கு: உருபு மயக்கம். ஏழனுருபுப் பொருளில் நான்கனுருபு நின்றது. கலவான்: ஆண்பாற்படர்க்கை எதிர்மறை வினைமுற்று.

இதுவு மது

54. என்னையர் தந்த விறவுணங்கல் யாங்கடிந்து
புன்னையங் கான லிருந்தேமாப் பொய்த்தெம்மைச்
சொன்னலங் கூறி நலனுண்ட சேர்ப்பனை
யென்னைகொல் யாங்காணு மாறு.

(சொ-ள்.) (தோழீ) என்னையர் தந்த இறவு உணங்கல் யாம் கடிந்து - என் தந்தையர், உடன் பிறந்தார் வலைவீசிக் கொணர்ந்து தந்த இறால் மீனைக்கவரவரும். புள்ளினங்களையோட்டி; புன்னை அம்கானல் இருந்தேம் ஆ - புன்னைமரங்களை யுடைய அழகிய கானலில் நாம் இருந்தோம் ஆக, (ஆங்கு வந்து) எம்மை பொய்த்து சொல் - நலம் கூறி நலன் உண்ட சேர்ப்பனை - எமக்குப் பொய்யாக நல்லுரை கூறியின்பம் நுகர்ந்த