கழிக்கரை எனவும் பொருள் தரும். தலைவனுடற் பொலிவு (உடலழகு) நம்மை மயக்கிக் கூட்டுவித்தது என்ற கருத்து விளங்க, ‘’பூங்கழிச் சேர்ப்பன்’’ என்றாள். கழிக்கரை யழகு கண்ணைக் கவர்வதுபோலவே அவனுடற் பொலிவும் நம் உள்ளத்தை மயக்கிற்று என்பது குறிப்பு. எமர் - தந்தையர் உடன் பிறந்தவர் உறவினரைக் குறிக்கும். உறவினர் பலர் கூடிச் சென்று மீன் பிடிப்பதுவே இயற்கை, எமர், கடல் கடந்து வருந்திக் கொணர்ந்த மீன்கள் ஆதலால் யாமும் அம்மீன்களைக் கண்ணும் கருத்துமாகக் காத்திருந்தோம்; வழி வருவாரையும் போவாரையும் நோக்காது: அவ்வாறிருந்தபோது வந்தனன் என்பது முன்னிரண்டடியின் கருத்து. இன்பம் நுகர்ந்த தலைவனை நாம் இனிக் காண்பதற்கு வழியாது கூறுக என்பது எச்சம். (இ-பு.) கருங்கரை, வன்மீன்; பூங்கழி பண்புத்தொகைகள் இல்லேம் என்ற தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று எச்சப் பொருள் பட்டது. நுகர்வனன் என்பதும் அது.
தோழி இரவுக் குறியிடம் தலைவிக்குணர்த்தியது 57. கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடற் பெண்ணைத் தடவுக் கிளைபயிருந் தண்கடற் சேர்ப்பன் நிலவுக் கொடுங்கழி நீந்திநம் முன்றிற் புலவுத் திரைபொருத போழ்து. (சொ-ள்.) தண் கடல் சேர்ப்பன் - குளிர்ந்த கடற்கரையுடைய தலைவன் (நம் தலைவன்) நிலவு கொடுங்கழி நீந்தி - மணல்களையும் வளைந்த கழிக்கரையும் கடந்து; நம்முன்றில் புலவு திரை பொருத போழ்து - நம் முற்றத்தில் புலானாற்றத்தையுடைய நீரில் அலையடிக்கும்படி குறிகாட்டிய போழ்தில்; கொய்மடல் பெண்ணை - வெட்டப்படு மடல்களையுடைய பனை மரத்தில்; கொடுவாய் புணர் அன்றில் தடவு கிளை பயிரும் - வளைந்த வாயையுடைய சேவலும் பேடுமாகப் புணர்ந்திருக்கும் அன்றிற் பறவைகள் பெருகிய தம் பேடு குஞ்சுகள் ஆகிய
|