பக்கம் எண் :

6

பிரியினும் தரியேன் என்று சூளுரை கூறித் தெளிவித்ததைக் குறித்தது.

(இ-பு.) கொளீஇய: சொல்லிசையளபெடை; பிறவினைப் பொருளைத் தருதலால். நேரிழை என்பது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி; நேரிழாய் என விளியாயிற்று. நேர்மையான அணியணிந்தவள் என்பது பொருள். தகையனோ - ஓகாரம்; எதிர்மறை. நாடன் தெளித்து கலந்து உள்ளாத் தகையனோ எனக் கூட்டுக. உள்ளா: ஈறு கெட்ட எதிர் மறைப் பெயரெச்சம்.

இதுவு மது

5. இரசங்கொண் டின்றே னிரைக்குங் குரலைப்
பிரசை யிரும்பிடி பேணி வரூஉ
முரசருவி யார்க்கு மலைநாடற் கென்றோள்
நிரைய மெனக் கிடந்த வாறு.

(சொ-ள்.) இரும்பிடி - கரிய பெண் யானைகளானவை; இன் தேன் - இனிய வண்டுகள்; இரசம் கொண்டு - இன்பத்தைக் கொண்டு; இரைக்கும் குரலை - பாடுகின்ற ஒலியைக் கேட்டு; பிரசை பேணி வரூஉம் - தேன் கூட்டினை விரும்பி வருகின்ற; முரசு அருவி ஆர்க்கும் - முரசு முழங்குவது போல அருவி யாரவாரஞ் செய்கின்ற; மலைநாடற்கு - மலை நாட்டையுடைய என் தலைவனுக்கு; என்தோள் - எனது தோளிற் கூடும் இன்பமானது; நிரையம் எனக் கிடந்த ஆறு - நரகம்போல நினைக்குமாறு இருக்கும் இயல்பு, (என்ன காரணம் என்று கூறினள்).

(வி-ம்.) முன் என் தோளிற் கூடும் இன்பத்தை விரும்பி இரவும் பகலும் இடையறாது வந்து திரிந்தவர், இஞ்ஞான்று நரகம் போலத் கருதி வெறுத்து வராது இருப்பதற்குக் காரணம் யாது என்று அறியாது கலங்குகின்றேன் எனத் தோழியிடங் கூறினள் என்பது. வரூஉ மலைநாடன், ஆர்க்கு மலைநாடன் எனத் தனித்தனி கூட்டுக. தேனீயின் குரலைக்கேட்டு, தேன்கூடு இருக்கும் இடமறிந்து அக் கூட்டினை யெடுக்கப் பெண்யானை