பக்கம் எண் :

61

அலையானது அலறி யொலிக்கின்ற உறாஅ நீர்ச் சேர்ப்பனை - என்னுடன் வந்து கூடாத நீர்மையையுடைய தலைவனை (நம் தலைவனை) உள்ளி இருப்பின் - தனியே அவன் பிரிவை நினைத்திருந்தால் என் முன்கை வளை பொறாஅ எனது முன்னங்கை வளையல்களைப் பொறுக்காமல் கீழே வீழ்விக்கின்றன. (நான் என் செய்வேன் என்றாள்.)

(வி-ம்.) என்னாருயிர்ப் பாங்கியே! நீ ஆற்றியிரு விரைந்து வந்து கூடுவர் என்று கூறுகின்றனை. நானும் ஆற்றியிருக்க நினைக்கிறேன். ஆயினும் அவர் பிரிவைத் தனியேயிருந்து நினைத்தால் உடல் மெலிந்து வளையல்கள் கழன்று விழுகின்றன. நான் எவ்வாறு பிரிவாற்றியிருப்பேன் என்று கூறியதாகக்கொள்க, நினைப்பினும் உடல் மெலிந்து வளை கழல்கின்றன என்றால் நினையாமல் இருக்கவியலுமா? தலைவனைக் காண்பதற்குரிய வழி கூறுக என்பது குறிப்பு. சுறாவெறிந்த குப்பை சுழலுங் கழிபோலத் தலைவனால் நலனுண்டு துறக்கப்பட்டுக் குடியுட் சுழல்கின்றனள் தலைவி எனவும், அலைகள் இறால்மீனை வீசி யெறிந்து ஆரவாரஞ் செய்வதுபோலப் பெண்டிர் பலரும் அலர்தூற்றியாரவாரஞ் செய்கின்றனர் எனவும் உள்ளுறை கொள்க. அலற என்ற செய எனெச்சத்தை அலறி எனத் திரித்துக் கொள்க, கழியுள் ஓதம் இரைக்கும் சேர்ப்பன் எனவும், உறாஅ நீர்ச் சேர்ப்பன் எனவும் தனித்தனி கூட்டுக. மகரமீன் கடலிற் சிறு மீன்களை யெல்லாம் அடித்துக் கொன்று தின்னும்; அம் மீனுக்கு மேற்பட்ட வலிமையுடைய மகன் ஒன்று மின்று; கடல் ஒரு போர்க்களமாக, சுறாமீன் ஒரு வேந்தனாக மற்றை மீன்கள் எல்லாம் வீரர்களாகப் போர் புரிந்து வெல்லும் அது. கல்லாடர் கடலின் சிறப்புக் கூறும் போது ‘’சுறவ வேந்து நெடும்போர் செய்ய, முழக்கமொடு வளைத்த அமர்க்களமாகியும்’’ என்றார். உறாஅ - அன்பு பொருந்தாத எனவும் பொருள் கொள்ளலாம்.

(இ-பு.) சுறா, சுறவு, சுற எனச் செய்யுளில் வரும். வழக்கிற் சுறா சுறவு எனவரும். இறா என்பதும் அவ்வாறே வரும். நன்னூல் ‘’குறியதன் கீழா’’ சூ. 172 என்ற விதிகொள்க, ‘எறி குப்பை’ எறியோதம் வினைத்தொகைகள். உறாஅ, பொறாஅ