பக்கம் எண் :

62

என்பன இசை நிறையள பெடைகள்.என் முன்கை வளைபொறா எனக்கூட்டுக. உறாஅ: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பொறாஅ: பல வின்பால் எதிர்மறை வினைமுற்று.

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக நிற்க தோழி தலைவிக்குக்
கூறுவாளாய்ப் படைத்து மொழிந்தது.

59. தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை
மாழை மானோக்கின் மடமொழி - நூழை
நுழையு மடமகன் யார்கொலென் றன்னை
புழையு மடைத்தாள் கதவு.

(சொ-ள்.) மாழை மான் நோக்கின் மடமொழி - மாவடுகையும் மான் பார்வையையும் போன்ற விழிகளையுடைய மடமை மொழியுடையாய்; தாழை குருகு ஈனும் தண் அம் துறைவனை - தாழைமரம் கொக்குப்போல வெள்ளியமலர் பூக்கும் குளிர்ந்த அழகிய நீர்த்துறையையுடைய நம் தலைவனை இன்னான் என அறியாது; அன்னை - நம் தாயானவள்; நூழை நுழையும் மடமகன் யார் கொல் என்று - புறக்கடை வாயில் வழிவந்து நாளும் மனைப்புகுந்து செல்லும் அறிவிலி யாரோ யான் அறியேன் என்று கூறி; கதவு புழையும் அடைத்தாள் - கதவிலுள்ள சிறிய துளையையும் அடைத்துப் பூட்டிவிட்டாள் அல்லவா? (இனி நாம் என் செய்வது என்று தோழி கூறினள்).

(வி-ம்.) இது படைத்து மொழி கிளவியாம். தலைவன் விரைவில் வரைய வருதல் கருதிக் கூறியது. சிறைப் புறத்து நிற்குந் தலைவன் கேட்டு இவ்வாறு நம் களவு வெளிப்பட்டது போலும் இனிக்களவொழுக்கம் நிகழவழியின்று. நாம் விரைந்து வரைந்து இல்லறம் நடத்த வேண்டும் என எண்ணுவான் என்று கருதிப் பொய்யாகத் தலைவியுடன் தோழி கூறியது: படைத்து மொழி கிளவி என்பது நடவாத ஒரு செயலை நடந்ததாகத் தானே கற்பித்துக் கூறுங் கூற்றாம். தாழை குருகு ஈனுவது போலத் தலைவன் கள்வனாயினான் என்பது குறிப்பு, கதவிற் பூட்டு அமைப்பதற்குச் சிறிய துளையொன்று