வருவது போல நமது குரலைக் கேட்டு நாமிருக்கும் இடமறிந்து வந்து என்னைக் கலந்து இன்பம் நுகர்ந்த தலைவன் என அவனியல்பு கூறியவாறு காண்க. நாட்டினியல்பு உடையவன் அவன் என நயப்புக் கூறியவாறு இது. முரசருவி யார்க்கும் நாடன் என்றது, இவன் நாடு போலவே அவனைக் குறித்து அலர் பரவி யெங்கும் ஒலிக்கும் என்ற குறிப்பை விளக்கியது. இரசம் - சுவை. அஃது இன்பத்தை யுணர்த்தியது. பிரசம் - தேன். இது அம் குறைந்து பிரசு என நின்று ஐ யுருபு புணர்ந்து பிரசை என்றாயிற்று. தேன் கூட்டினைக் காட்டியது. (இ-பு.) இனிமை + தேன் - இன்றேன். இருமை + பிடி = இரும்பிடி. பண்புத் தொகைகள். வரும் வரூஉம் என அளபெடுத்தது. இசை நிறையளபெடையிது: முரசருவி: உவமைத்தொகை; முரசு போல என உவமை யுருபுவிரிக்கப்படுவதால், என்றோள்; ஆறாம் வேற்றுமைத் தொகை. இதுவு மது 6. மரையா வுகளு மரம்பயில் சோலை யுரைசான் மடமந்தி யோடி யுகளும் புரைதீர் மலைநாடன் பூணேந் தகலம் உரையா வழங்குமென் னெஞ்சு. (சொ-ள்.) மரை ஆ உகளும் - காட்டுப் பசுக்கள் தாவித் திரிகின்ற; மரம் பயில் சோலை - மரங்கள் வளர்ந்திருக்கும் சோலையில்; உரைசால் மடம் மந்தி ஓடிஉகளும் - உயர்த்துச் சொல்லப் படுதலமைந்த இளமையான குரங்குகள் விரைந்து தாவித் திரிகின்ற; புரைதீ மலைநாடன் பூண் ஏந்து அகலம் - குற்றம் நீங்கிய மலை நாடனாகிய தலைவனது ஆர முதலிய அணிகலம் தாங்கிய மார்பானது, என் நெஞ்சு உரையா வழங்கும். என் மனத்தைத் தேய்த்து அதனுள் நடக்கின்றது, (என் செய்வேன் தோழி என்றாள்).
|