பெருமை - அறிவொழுக்கங்களில் மிகுதியுடைமை. அகறல்; தல் விகுதிபெற்ற தொழிற்பெயர். உரிமை கிழமை, பற்று, தன்மனைக்கு உரிமையுடையவள்; மனைவி . காமுற்று : காமுறு - பகுதி, காமம் உறு என்பதன் விகாரம் விழுமிய : பண்படியாய்ப் பிறந்த பலவின்பாற்பெயர். அறிவின்மையாகிய குறையுள்ள மக்களை முழு மக்கள் என்றது மங்கல வழக்கு : முழுமையாகிய மக்கள் : பண்புத்தொகை. படித்து வருந்தி மனத்திலாயினும் உடம்பிலாயினும் சிறிதும் புரைபடாதவர்; அஃதாவது : பிறந்தபடியிருப்பவர், "முழுமகன் சிதடன் இழுதை மூடன்" - திவாகரம். அகறல் வாழ்தல் துணிதல், இவற்றில் உம் என்னும் எண் இடைச்சொல் தொக்கு நின்றது : பெயர்ச் செவ்வெண். (9) 10. கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்த லில. (இ-ள்.) கணக்காயர் - நெடுங்கணக்கு முதலியன கற்பிப்பவரை (ஆசிரியரை), இல்லாத - உடையதாயிராத, ஊரும் - ஊரிலிருத்தலும், பிணக்கு - மாறுபட்ட பொருளை, அறுக்கும் - நீக்கும் மூத்தோரை - (கல்விகேள்விகளில்) முதிர்ந்தவரை, இல்லா - உடையதல்லாத, அவைக் களனும் - சபையிலிருத்தலும், பாத்து - பகுத்து, உண்ணும் - சாப்பிடும், தன்மை - குணம், இலாளர் - இல்லாதவர், அயல் இருப்பும் - பக்கத்திலிருத்தலும், இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், நன்மை - (ஒருவனுக்கு) நன்மையை, பயத்தல் - தருவன, இல - அல்லவாம், (தீமை பயப்பனவாம்) (எ-று.) (க-ரை.) கல்வி கற்பிக்கத்தக்கவரில்லாத ஊரிலிருப்பதும் ஏற்பட்ட வழக்கைத் தீர்க்கும் திறமில்லாதவர் சபையிலிருப்பதும், உதவி செய்யாதவர் பக்கத்திலிருப்பதும் பயனற்றவை. இருக்க வேண்டாம் என்பது கருத்து. கணக்காயர் - கணக்கு+ஆயர், கணக்கை ஆய்ந்தவர்; கணக்கு - இஃது இலக்கணம் முதலியவற்றிற்கும் உப லட்சணம்; ஆயர் - ஆராய்ந்தவர்; ஆய் - ஆராய், இவர் மூலபாடங்கற்பிப்பவர் என்பது, "கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற், பெற்றதாம்
|