பக்கம் எண் :

11

பேதையோர் சூத்திரம்" என்ற நாலடியால் விளங்கும். பிணக்கு - பிணங்குதல். பிணங்கு என்னும் முதனிலை பிணக்கு எனத் திரிந்தது : தொழிற் பெயர்; ஒரு பொருளைக் குறித்து இருவர்க்குளதாம் மாறுபாடு. அறுக்கும் - ஐயந்திரிபற நீக்கும். மூத்தோர் - கற்றறிந்த பெரியோர். "அவைக்குப் பாழ் மூத்தோரை யின்மை" என்பது நான்மணிக்கடிகை. அவைக்களன் - சபையாகிய இடம் : இருபெயரொட்டுப் பண்புத்தொகை. களன் : களம் என்பதன் போலி. பாத்து - பகுத்து." பாத்தூண் மரீஇ யவனைப் பசி யென்னும், தீப்பிணி தீண்ட லரிது" என்ற திருக்குறள் 227 இல் பாத்து பகுத்து என்னும் பொருளில் வந்துள்ளது. "பகடு நடந்த கூழ் பல்லாரோடுண்க" என்பது நாலடி. இல்வாழ்வான் பிரமசாரிமுதலிய ஒன்பதின்மர்க்குங் கொடுத்துண்பது முறையெனத் திருவள்ளுவர் அறுதியிட்டிருப்பினும், விருந்தினர்க்கும் உறவினர்க்குமாவது கொடுத்துண்பது இன்றியமையாதது என்பது வற்புறுத்தப்படும். "விருந்தின்றி யுண்ட பகலும்" என்ற இந் நூல் 44ஆம் செய்யுளடியையும் நோக்குக.

(10)

 11. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
களியாதான் காவா துரையுந் - தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்
ஊரெல்லாம் நோவ துடைத்து.

(இ-ள்.) விளியாதான் - (தன்னை) அழையாதவன், கூத்து ஆட்டு - கூத்தாட்டத்தை, காண்டலும் - (தான் சென்று) பார்ப்பதும், வீழ - (தளர்ந்து) விழும்படி, களியாதான் - மதுவுண்டு களியாதவனாயிருந்தும், காவாது - காவாமல், உரையும் - (வழுப்படச்) சொல்லுதலும், தெளியாதான் - (தன்னை) நம்பாதவன், கூரையுள் - வீட்டிலே, பல்காலும் - பலமுறையும், சேறலும் - செல்லுதலும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஊரெல்லாம் - ஊரிலுள்ளோரெல்லாரும், நோவது - துன்பப்படுங்குற்றத்தை, உடைத்து - உடையன; (எ-று.)

(க-ரை.) அழைக்கப்பெறாத ஆட்டத்தைக் காணப்போவதும், களியன்போல் காவாது உரைத்தலும், தன்னை நம்பாதவன் வீட்டிற் செல்லுதலும், வருந்தத்தக்க குற்றங்களாம்.

கூத்து - நாடகம்.ஆட்டு - ஆடுதல், ஆட்டு : விகாரப்பட்ட முதனிலைத் தொழிற் பெயர், "கூத்தாட் டவைக்குழாத் தற்றே" என்ற