யும் பெயர்; என்: இடைச்சொல்; பகுதி, "எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்" என்ற கம்பர் தனிக் கவியடியும் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்ற உண்மையை விளக்கும். பாடா : எதிர்மறை வினையெச்சம், து விகுதி கெட்டது. இருக்க : செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம். ஆக : செயவென் வாய்பாட்டு வினையெச்சம். கோள் : முதனிலை திரிந்த தொழிற் பெயர். விருந்து, கேள் : இவை பண்பாகு பெயராய் விருந்தினரையும் கேளிரையும் உணர்த்தும். கோளாளன் என்பதற்கு ஆசிரியர் கூறிய நூற்பொருளை அமையக் கொள்ளும் மாணாக்கன் என்று சொல்லப்படுவோன் கேட்டவற்றை மறத்தலில்லாதவன் எனலும் ஆம். (12) 13. சீலம் அறிவான் இளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார். (இ-ள்.) சீலம் - (பிறர்) குணத்தை, அறிவான் - அறிந்து நடக்கிறவன், இளம் கிளை - இளமை (தொட்டு வந்த) சுற்றத்தானாவான், சால - மிகவும், குடி - குடிகளை, ஓம்பல் - பேணுதலில், வல்லான் - வல்லவன், அரசன் - அரசனாவான், வடுஇன்றி - குற்றம் இல்லாமல், மாண்ட - மாட்சிமைப்பட்ட, குணத்தான் - குணத்தையுடையவன், தவசி - தவசியாவான், என்ற - என்று சொல்லப்பட்ட, இ மூவர் - இம் மூவரும், யாண்டும் - எவ்விடத்தும், பெறற்கு - பெறுதற்கு, அரியார் - அரியராவார்; (எ-று.) (க-ரை.) பிறர் குணம் அறிந்து நடக்கவல்ல சுற்றத் தானும், குடிகளைக் காக்கவல்ல அரசனும், குற்றமில்லாது துறவோடிருக்கவல்ல தவசியும் எல்லாராலும் தேடிப் பெற வேண்டுபவராவர். இளங்கிளை - புத்திரனாவான் என்பதுமுண்டு. இளமையாகியகிளை : பண்புத்தொகை. இளமை என்பதற்கு இளமை தொட்டு வந்த என இலக்கணையாற் பொருள் கொள்ளப்பட்டது; கிளை - சுற்றத்தார்க்கு உவமையாகுபெயர். சால : உரிச்சொல்; மிகுதி யென்னும் பொருட்டு. குடியோம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணல். அஃதாவது ஆறிலொன்றாகிய இறைப் பொருளையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். மாண்ட
|