பக்கம் எண் :

16

(இ-ள்.) மண்ணின்மேல் - மண்ணுலகத்தில், வான் - பெரிய, புகழ் - புகழை, நட்டானும் - நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் - பெண்களுள், மாசுஇல் - குற்றமற்ற, சீர் - சிறப்புடைய கற்பு உடையாள் - கற்புடையவளை, பெற்றானும் - (மனைவியாகப்) பெற்ற கணவனும், உண்ணு நீர் - உண்ணப்படுகின்ற நீர் குறைவு இன்றி - குறைவுபடாதபடி, கூவல் - கிணறுகளை, தொட்டானும் - தோண்டி வைத்தவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், சாவா - (எக்காலத்தும்) இறவாத, உடம்பு - (புகழ்)உடலை, எய்தினார் - பெற்றவராவார்; (எ-று.)

(க-ரை.) உலகத்தில் ‘ஈதல் இசைபட வாழ்தல்' என்ற பொய்யாமொழிக்கிணங்க, இரப்பவர்க்கு ஈந்து சிறந்த புகழை நாட்டியவனும், சிறந்த கற்புடைய மனைவியைப் பெற்றவனும் நீரறாத கிணறு முதலியவற்றைத் தோண்டி வைத்தவனும் இறந்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவராவார்.

மண் : கருவியாகு பெயர். நட்டான், தொட்டான், பெற்றான் என்பவை நடு, தொடு, பெறு என்ற வினைப் பகுதியடியாகப் பிறந்த விளையாலணையும் பெயர்கள், பெண்: சாதியொருமை சீர் கற்பு - சீரும் கற்பும் எனக் கொள்ளுமிடத்து எண்ணும்மை தொக்கது. கற்புடையாட் பெற்றான் - உயர்திணைப் பெயராயினும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால், ளகரம் டகரமாகத் திரிந்தது. கூவல் : கூவம் என்பதன் போலி, பூத உடம்பு அழிந்தும்,அதனாலாய புகழுடம்பு அழியாதிருத்தலால் சாவா வுடம்பு எனவும், அம் மூவரும் என்றும் உளர்போல விளங்குதலின் உடம்பு எய்தினார் எனவுங் கூறினார்.

(16)

 17. மூப்பின்கண் நன்மைக் ககன்றானும் கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும் - வாய்ப்பகையுள்
சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப் புணைகைவிட் டார்.

(இ-ள்.) மூப்பின்கண் - மூப்பு வந்த இடத்தும் , நன்மைக்கு - துறவறத்துக்கு, அகன்றானும் - (அஞ்சி) நீங்கினவனும் கற்பு உடையாள் - கற்புடைய மனைவியை, பூப்பின்கண் பூத்து நீராடிய பின், சாரா - மருவாத, தலைமகனும் - கணவனும், வாய்ப்