பக்கம் எண் :

2

(கருத்துரை) எவ்வுலகத்தாரும் உய்யும்படி உலகளந்ததும் தமக்கும், தம்மவருக்கும் இடர் செய்யத் துணிந்த தீயர்களை அழித்தல் செய்ததும் ஆகிய அத் திருவடியைத் துதிக்க இந் நூலுக்கு நேரிடும் இடையூறுகள் நீங்கும்.

திரிகடுகம் என்னும் இந்நூலிற் செய்யுட்கள் தோறும் மும்மூன்று பொருளைச் சேர்த்துச் சொல்வது தோன்ற இக் காப்புச் செய்யுளினும் திருமாலின் திருவடிகள் செய்த மூன்று செயல்களைச் சேர்த்துக் கூறினார்.

ஞாலம் அளந்த கதை:- விரோசனன் மகனாகிய பலிச் சக்கரவர்த்தி என்பவன் பெருவலி படைத்தவன். மேல் நடு கீழ் என்னும் மூன்று உலகங்களையும் வென்றவன். இவன் வெற்றியிற் பொறாமையுற்ற இந்திரன் வேண்டுகோட் கிசைந்த திருமால் ஒரு குறுகிய பிரமசாரி வடிவில் வந்து தம்மடியால் மூவடி மண் வேண்டினார். அசுர குருவாகிய சுக்கிரன், வந்தவர் மாயத்திருமால் என்று கூறித் தடுத்தும் மாவலி தத்தஞ் செய்து கொடுத்தனன். கொடுத்த மண்ணைத் திருமால் அளக்கக் கருதி நெடு வடிவங்கொண்டு மேல் இடை கீழ் ஆகிய மூன்று உலகங்களையும் அளந்தனர் என்பது. இது, "மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால், ஞாலம் முழுதும் நயந்தளந்தான்" என்ற திருவள்ளுவமாலைச் செய்யுளடியாலும் தெளியப்படும்.

குருந்தஞ் சாய்த்தது:- கிருட்டிண அவதாரத்தில் கஞ்சனாகிய தம் மாமனால் ஏவப்பட்ட ஓர் அசுரன் யமுனையாற்றங் கரையில் குருந்த மரத்தில் தங்கிக் கண்ணனுக்குத் தீங்கு வருவிக்கப் பார்த்திருந்தான். அம் மாயம் உணர்ந்த கண்ணன் இடைப் பெண்களோடு விளையாடுகின்ற முறையில் தம் திருவடிகளால் அம் மரத்தை முறித்துத் தள்ளிவிட்டார் என்பது.

சகடம் உதைத்தது:- கண்ணன் நந்தகோபர் மனையில் குழந்தையாய்த் தொட்டிலிற் படுத்திருக்கையில் கஞ்சன் ஏவலால் சகட வடிவமாய் வந்த அசுரனை தம் காலால் உதைத்து அழித்தார் என்பது.

கண் : ஏழனுருபு, ஈண்டு இடம் என்னும் பொருட்டு, அகல் ஞாலம் : வினைத்தொகை, அளந்ததூஉம், சாய்த்ததூஉம், உதைத்ததூஉம் : இன்னிசை யளபெடை. இவற்றை வினையாலணையும்