பக்கம் எண் :

3

பெயரென்பர். அளந்த பொருள் சாய்த்த பொருள் உதைத்த பொருள் என்று கூறுவர். காமரு - காமர் என்னும் உரிச்சொல் உகரச்சாரியை பெற்றது; அழகிய என்னும் பொருளது. ஞாலம் - உபலட்சணமாய் வானுலகம் முதலியவற்றையும் காட்டும், வண்ணன் - வண்ணத்தை யுடையவன். வண்ணம் - நிறம், அடி - அடிகள் : சாதியொருமையாதலால் சாய்த்தது உதைத்தது அளந்தது என்பன ஒருமையாகின்றன. செய்தவை : சொல்லெச்சம். இச் செய்யுளில், அளந்தது என்பதனால் பேரருளும், சாய்த்தது என்பதனால் பேராற்றலும், உதைத்தது என்பதினால் பேரறிவும் ஆகிய இம் மூன்றும் கடவுட் குணங்களில் குறிக்கப்பெறுவதும் காண்க.

நூல்

 1. அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் -சொல்லின்
அரில்அகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.

(இ-ள்.) அருந்ததி - அருந்ததிபோலும், கற்பினார் - கற்பையுடைய மகளிரின், தோளும் - தோள்களும், திருந்திய - குற்றமற்ற, தொல் - பழைமையான, குடியில் - குடிப்பிறப்பில், (தோன்றி), மாண்டார் - மாட்சிமை யடைந்தவரோடு, தொடர்ச்சியும் - கொள்ளும் நட்பும், சொல்லின் - சொற்களினிடத்தே, அரில் - குற்றங்களை, அகற்றும் - நீக்கவல்ல, கேள்வியார் - கேள்வியை யுடையவரோடு, நட்பும் - செய்யப்படும் நட்பும், இமூன்றும் - இந்த மூன்றும், திரிகடுகம் போலும் - (ஒருவனுக்கு) திரிகடுகம் போன்றுள்ள, மருந்து - மருந்துகளாம்; (எ-று.)

(க-ரை.) நற்குண நற்செய்கைகளுள்ள பெண்ணை மணஞ்செய்திருப்பது முதலிய மூன்றும் இம்மை மறுமைகளில் நேரிடும் துன்பங்களைத் தீர்த்து இன்பங் கொடுப்பவாதலால் நோயைப் போக்கி நலத்தைக் கொடுக்கும் சுக்கு திப்பிலி மிளகுகளாகிய மருந்து போலும் என்பது.

"திரிகடுகம் சுக்குத் திப்பிலி மிளகு" (பிங்கலநிகண்டு சூ.352.) சுக்கு முதலிய மூன்றும்போல் தோள் முதலிய மூன்றும் இல்வாழ்வானொருவனுக்குத் துன்பம் அகற்றி இன்பம் விளைத்த