பக்கம் எண் :

34

(க-ரை.) தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப் பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின் உண்மை யுணராதவர் செய்கைகளாம்.

உயிர்கட்கு : உருபு மயக்கம். உடன்பாடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். வினை - ஊழ்; முன்வினைப்பயன் ஒருவன் தனக்குள் தானொன்றைக் கருதும்போது தன்னைத் தன்மைப்பன்மையாக வைத்துக் கூறுதல் மரபாதலால் உடையேம் என்பது வழாநிலை. காமுறு வேள்வியாவது - தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம். அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது. ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது.

(36)

 37. குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
சா
 ல்பினிற் றோன்றுங் குடிமையும் - பால்போலுந்
தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை யுடையார் வழக்கு.

(இ-ள்.) குறளையுள் - பொருட்சுருக்கத்தினால், நட்பு அளவு - ஒருவன் நட்பின் எல்லை, தோன்றும் - காணப்படும்; உறல் இனிய - பொருந்துதற்கு இனிய, சால்பினில் - (நற்குணச் செய்கைகளின்) நிறைவில், குடிமை - உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் - விளங்கும்; பால் போலும் - பால்போன்ற, தூய்மையுள் - மனம் தூயனாந் தன்மையினால், பிரமாணம் - (நிலையினது) அளவு, தோன்றும் - விளங்கும்; இமூன்றும் - இந்த மூன்றும், வாய்மை உடையார் வழக்கு - உண்மை கூறும் பெரியோரது நெறியாம்; (எ-று.)

(க-ரை.) நட்பளவு, குடிமை, பிரமாணம் இம்மூன்றும் ஒரு தன்மையவாய் நல்லாரிடத்து நிற்கும்.

குறளையுள்; குறு : பகுதி, அள் : தொழிற்பெயர் விகுதி, ஐ : சாரியை, உள: ஏழனுருபு, ஏதுப்பொருளில் மயங்கிற்று. குறளையுள் நட்பளவு தோன்றும் என்பதற்கு (நட்பின ரிருவரைப் பிரிக்கும்படி ஒருவன் சொல்லும்) கோட்சொல்லில் அக்கோளைக் கேட்டோனது நட்பினது அளவு விளங்கும் என்றுங் கூறலாம்.