பெண்கட்கு, ஒத்த - இசைந்த, ஒழுக்கம் - நடையை, உடைமையும் - உடையரா யிருத்தலும்; பாத்து உண்ணும் - பகுத்து உண்ணுதற்குக் காரணமாகிய, நல் அறிவு ஆண்மை - நல்லறிவை ஆளுந்தன்மையில், தலைப்படலும் - கூடுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தொல் அறிவு ஆளர் - பழைமையாகிய நூலறிவை ஆளுதலுடையவர், தொழில் - செயல்களாம்; (எ-று.) (க-ரை.) எழுந்த சினத்தை அடக்குதலும், பெண்களுக்கு வயப்படாமலும், அவர்களால் வெறுக்கப்படாமல் நடத்தலும், தக்கார்க்குக் கொடுத்துத் தானும் உண்கின்ற நன்மையோ டிருத்தலும் இன்றியமையாதன. நுணுக்கும் : நுணுக்கு என்னும் வினையடியாகப் பிறந்த பிற வினைப் பெயரெச்சம். தன் வினைப் பகுதி - நுணுகு. விறல் : தொழிற்பெயர்; விற : பகுதி. அல் : விகுதி. தொல்லறிவு : தொன்மை + அறிவு. தொன்மை - பழைமை. ஒத்த ஒழுக்கமாவது தன்சொற்கு இசைந்து நடக்கும்படி செய்தலும் அவரோடு இசைந்து இன்புற்றிருத்தலுமாம். (40) 41. அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந் தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) அலந்தார்க்கு - (வறுமையால்) துன்பப்பட்டு வந்தவர்கட்கு, ஒன்று - (அவர் விரும்பும்) ஒரு பொருளை, ஈந்த புகழும் - ஈந்ததனாலாகிய இசையும்; துளங்கினும் - (வறுமை முதலிய வற்றால்) தளர்ந்த காலத்தும். தன் குடிமை - தன் குடிப்பிறப்புக்குத் தகுந்த ஒழுக்கம், குன்றாத் தன்மையும் - குறையாத இயல்பும்; அன்புஓடி - அன்பு மிகுந்து, நாள் நாளும் - நாடோறும், நட்டார் - நட்புச்செய்தவரை, பெருக்கலும் - பெருகச் செய்தலும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கேட்கப்படும் அறங்கள் பலவற்றிலும், தலை - முதன்மையானவையாம்; (எ-று.) (க-ரை.) வறுமையால் வருந்துவோர்க்கு ஈதலும், வறுமை யுற்ற விடத்தும் தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வனவற்றைச் செய்யாமையும். நட்புச்செய்தவரை மேன்மேலும் பெருக்குவதும் சிறந்த அறம்.
|