பக்கம் எண் :

39

(இ-ள்.) வாயின் அடங்குதல் - தீவழிச் செல்லாமல் காக்குதலால், துப்புரவு ஆம் - இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்; செய்கை - உடலின் செய்கை, அடங்கல் - அடங்குதலால், மாசு அற்ற - குற்றம் அற்ற, திப்பியம் ஆம் - (மறுமையில்) தெய்வப் பிறப்பு உளதாகும்; பொய் இன்றி - உண்மையாக, நெஞ்சம் - மனம், அடங்குதல் - அடங்குதலால், வீடு ஆகும் - முத்தி உள்ளதாகும், இ மூன்றும் - இம் மூன்று அடக்கமும், வஞ்த்தின் - பொய்யினின்றும், தீர்ந்த - நீங்கிய, பொருள் - பொருள்களாகும்; (எ-று.)

(க-ரை.) உளம், உரை, செயல் ஆகிய மூன்றும் அடக்கமாயிருப்பவர் முத்தி யடைவர்.

துப்புரவு - உறுதியான அனுபவம்; இங்குச் செல்வம், திப்பியம் : திவ்வியம் என்ற வட சொற்றிரிபு : சொர்க்கத்தில் பிறப்பது என்பது பொருள். வீடு - அவா முதலியவற்றை விடுதலால் உளதாகும் முத்தி : காரணவாகு பெயர். நெஞ்சம் : இடவாகு பெயர். வஞ்சத்தின் : இன் ஐந்தனுருபு, நீக்கப் பொருள்.

(43)

 44. விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன்
றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே யுரனுடை யார்க்கு.

(இ-ள்.) விருந்து இன்றி - விருந்தினரை இல்லாமல், உண்ட - தனித்து உண்ணக் கழிந்த, பகலும் - பகற்பொழுதும், திருந்து இழையார் - திருந்திய அணிகளை அணிந்த மனைவியரை, புல்ல - பொருந்துவதால், புடை பெயரா - கழிதல் இல்லாத, கங்குலும் - இரவும்; இல்லார்க்கு - வறியவர்க்கு, ஒன்று - ஒன்றை, ஈயாது - கொடாமையினால், ஒழிந்து அகன்ற - கழிந்த, காலையும் - நாளும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், உரன் உடையார்க்கு - அறிவுடையார்க்கு, நோயே - (நினைக்குந்தோறும்) நோய்களாம்; (எ-று.)

(க-ரை.) விருந்தில்லாப் பகலும், மனைவியில்லா இரவும், வறிஞர்க் கீயாக் காலைவேளையும்
அறிவுடையோர்க்கு நோய் செய்வன.

பகல் : தொழிலாகுபெயர். ஈயாது : வினையெச்சம். ஒழிந்து அகன்ற : ஒரு பொருட் பன்மொழி. நோயைத் தருபவற்றை