பக்கம் எண் :

44

(இ-ள்.) கொள்பொருள் - தான் கொள்ளுதற்குரிய பொருளை, வெஃகி - விரும்பி, குடி அலைக்கும் - குடிகளை வருத்துகின்ற, வேந்தனும் - அரசனும்; உள்பொருள் - உண்மை நிகழ்ச்சியை, சொல்லா - சொல்லாமல், சலம் மொழி - பொய் சொல்லுகின்ற, மாந்தரும் - மனிதரும்; இல் இருந்து - (ஒருவனுக்கு மனையாளாய்) வீட்டிலிருந்து, எல்லை - (அவன் சொல், மனையென்னும் இரண்டின்) எல்லையை, கடப்பாளும் - கடந்து நடப்பவளும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், வல்லே - விரைந்து, மழை அருக்கும் - மழையைக் குறைக்கின்ற, கோள் - கோள்களாம்; (எ-று.)

(க-ரை.) குடிகொன்று இறைகொள்ளும் கொடுங்கோல் மன்னனும், பொய் பேசுகின்றவனும், பெண் தன்மையை மீறி நடக்கின்ற பெண்ணும் இருக்கும் நாட்டில் மழை பெய்யாதென்பது.

கொள் பொருள் : வினைத்தொகை. இறை - வரி. உள் பொருள் : பண்புத்தொகை. சொல்லா : மல் ஈறு தொக்க வினையெச்சம். வல்லே : இடைச்சொல். அருக்கும் : பிறவினைப் பெயரெச்சம், அருகு : தன்வினைப்பகுதி; கோள் - வலி; தங்கள் இயக்கத்தால் ஒருவனுக்கு நன்மையேனும் தீமையேனும் வருவிக்கும் கிரகங்களுக்கு ஆதலால், பண்பாகு பெயர்.

(50)

 51. தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே
சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே
ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.

(இ-ள்.) தூர்ந்து - (பொருள்வருவாய்) அடைபட்டு ஒழுகிக் கண்ணும் - (இல்லாமல்) வாழுமிடத்தும், துணைகள் - உறவாவோர், துணைகளே - உறவினரே யாவர்; சார்ந்து - கருத்துக்கு இணங்கி, ஒழுகிக் கண்ணும் - நடந்தவிடத்தும், சலவர் - பகைவர், சலவரே - பகைவரே; இன்னா - துன்பஞ் செய்யுங் குணமுள்ள, கயவர் - கீழ்மக்கள், ஈர்ந்த - பிளக்கப்பட்ட கல் - கல்லை ஒப்பாவார்; இவர் மூவர் - இவர் மூவரும், தேர்ந்தக்கால் - (அறிவுடையோர்) ஆராயுமிடத்து; தோன்றும் - வெளிப்படும், பொருள் - பொருள்களாவார்; (எ-று.)

(க-ரை.) வறுமைக் காலத்தும் உறவினர்களே உதவி புரிபவர்; எவ்வளவு நெருங்கிப் பழகினும் பகைவர் பகைவரே, கற்