பக்கம் எண் :

50

 59. கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் - இளையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளன போலக் கெடும்.

(இ-ள்.) கிளைஞர்க்கு - சுற்றத்தார்க்கு, உதவாதான் - உதவாதவனுடைய, செல்வமும் - பொருளும்; பைங்கூழ் - பசிய பயிர், விளைவின்கண் - தனக்குப் பயன் கொடுக்குங் காலத்து, போற்றான் - அதனைக் காக்கும் இயல்பில்லாதவனுடைய, உழவும் - உழவுத் தொழிலும்; இளையனாய் - இளையனாயிருந்து, கள்உண்டு - கள்ளைக் குடித்து, வாழ்வான் - வாழ்கின்றவனுடைய, குடிமையும் - குடிப்பிறப்பும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், உள்ளனபோல - நிலை நிற்பனபோலத் தோன்றி, கெடும் - அழியும்; (எ-று.)

(க-ரை.) செழுங்கிளை தாங்காதான் செல்வமும், விளையுங் காலத்திற் காவாதான் பயிரும், இளமைதொட்டே கள்ளுண்கின்றவன் நற்குடி வாழ்க்கையும் கெட்டுப்போம் என்பது.

கிளைஞர் - சுற்றத்தார், இளையன் - அறிவில் சிறியவன் எனலுமாம். தோன்றி; சொல்லெச்சம். பைங்கூழ் - பசுமை + கூழ் : பசுமை - இளமை.

(59)

 60. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்
விலங்கின் பிறப்தபின் வெருவும் - புலந்தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும்.

(இ-ள்.) பேஎய் பிறப்பில் - பேயினது பிறப்புடையவர்களில், பெரு பசியும் - மிக்க பசியும்; பாஅய் விலங்கின் பிறப்பின் - பாயும் இயல்புடைய மிருகப்பிறப்படைந்த உயிர்களில், வெருவும் - அச்சமும்; புலம் தெரியா - அறிவாகியபொருளை உணராத, மக்கள்பிறப்பின் - மனிதப் பிறப்படைந்த உயிர்களில், நிரப்பு - வறுமையும், இடும்பை - துன்பந் தருவனவாம்; இ மூன்றும் - இம் மூன்று பிறப் புயிர்களும், துக்கப் பிறப்பு ஆய்விடும் - துன்பமாகிய பிறப்புள்ள உயிர்களாய்விடும்; (எ-று.)

(க-ரை.) பேய்ப்பிறப்பில் பசி வருத்தமும், விலங்குப் பிறப்பில் கொலைப்பயமும், மக்கட்பிறப்பில் வறுமைத்துன்பமும் மிகுந்