மில்லாதவனும்; சான்றோர் முன் - பெரியவர் முன்னே, மன்றில், அறநிலையத்தில், கொடும்பாடு - பொய்ச் சொல்லை, உரைப்பானும் - சொல்லுகின்றவனும்; நன்று இன்றி - நற்செய்கை இல்லாதவனாய், வைத்த - ஒருவன் வைத்த, அடைக்கலம் - அடைக்கலப் பொருளை, கொள்வானும் - கைப்பற்றிக் கொள்பவனும்; இ மூவர் - ஆகிய இந்த மூவரும், எச்சம் இழந்து - தம் மக்களை இழந்து வருந்தி, வாழ்வார் - உயிர் வாழ்வார்; (எ-று.) (க-ரை.) நன்றி மறந்த நாணிலியும், மன்றிற் பொய்ச் சாட்சி புகன்றவனும், அடைக்கலப் பொருளை வௌவியவனும் மக்கட்பேறற்று வருந்துவர் என்பது. கொடும்பாடு : பண்புத்தொகை. கொடுமை - வளைவு. எச்சம் - எஞ்சுவது : தொழிற்பெயர்; ஒருவன் இறந்தபின் மிகுந்து நிற்பது மக்களும் புகழும் ஆதலால் இரண்டும் கூறலாம். நாணிலி என்பதில் இகரம் ஆண்பாலை யுணர்த்தியது வாழ்வார் : வாழார் என உடன் பாட்டில் வந்த எதிர்மறை. அடைக்கலம் : பண்பாகுபெயர். (62) 63. நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலும் - சீர்பயவாத் தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்த லில. (இ-ள்.) நோ - (தமக்கு வரும்) துன்பத்துக்கு, அஞ்சாதாரோடு - பயப்படாதவரிடத்து, நட்பும் - கொண்ட நட்பும்; விருந்து அஞ்சும் - விருந்தினர்க்கு உண்டி கொடுக்க அஞ்சுகின்ற, ஈர்வளையை - மனைவியை, இல்லத்து - மனையினிடத்தில், இருத்தலும் - இருக்கச் செய்தலும் : சீர்பயவா - சிறப்பைத் தராத, தன்மை - தன்மையையுடைய, இல் ஆளர் - இல்வாழ்வோருக்கு, அயல் இருப்பும் - அயலில் குடியிருத்தலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், நன்மை - நன்மையை, பயத்தல் இல - தருதலில் லனவாம்; (எ-று.) (க-ரை.) வருந் துன்பத்துக்கு அஞ்சா நண்பரின் நட்பும் விருந்தோம்பாத மனைவியோடிருப்பும், நற்குணமில்லாதவர் அயலிற் குடியிருப்பும் பயனற்வை என்பது. நோ : முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஈர்வளை : பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; பைந்தொடி
|