பக்கம் எண் :

53

என்னும் பொருளது. ஈர் : வினைத்தொகையாயின் அறுக்கப்பட்ட என்னும் பொருட்டு. வளை : பண்பாகு பெயர்.

(63)

 64. நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.

(இ-ள்.) நல் விருந்து - நன்மையான விருந்தினரை, ஓம்பலின் - பாதுகாத்தலால், நட்டாள் ஆம் - கணவனுக்கு நட்பினளாம்; வைகலும் - நாடோறும், இல் - இல்லறத்தை, புறஞ் செய்தலின் (வழுவாது) காத்தலால், ஈன்ற தாய் (ஆம்) - பெற்ற தாயாம்; தொல்குடியின் - தன் பழைய குடும்பத்துக்குரிய, மக்கள் பெறலின் - மக்களைப் பெறுதலால், மனைக்கிழத்தி (ஆம்) - மனையாளாம்; இ மூன்றும் - (விருந்தோம்பல் முதலிய) இம் மூன்று செயலும், கற்பு உடையாள் - கற்புடைய பெண், பூண்ட மேற்கொண்ட, கடன் - கடமைகளாம்; (எ-று.)

(க-ரை.) விருந்தோம்பல், மனையறம் போற்றல், மக்கட் பெறுதல் இவற்றைச் செய்யும் பெண்ணே கற்புடைய பெண் என்பது.

மனைக்கிழத்தி - மனைவி. கிழத்தி - கிழமையுடையவள். புறஞ் செய்தல் என்பதில் புறஞ்செய் ஒரு சொல். விருந்தினர்க்கு நன்மையாவது, இல்வாழ்வானால் இயன்றவளவு தந்த உண்டி முதலியவற்யை ஏற்று மகிழ்தல். ஆம் என்பதனை, தாய், கிழத்தி என்பவற்றோடுங் கூட்டுக. தொன்மை குடி - தொல் குடி. தொன்மை - பழைமை, அஃதாவது தொன்று தொட்டு வருவது.

(64)

 65. அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற
விட்டகல் கில்லாத வேட்கையும் - கட்டிய
மெயந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும்
தந்நெய்யில் தாம்பொரியு மாறு.

(இ-ள்.) அலைகடலின் அலைகின்ற - கடலைப்போல், அச்சம் தோன்றலும்; மாறி - மாறிப் பெரும் பயம் (ஒருவர் உள்ளத்தில்) தொன்றுதலும்; ஆர்வு உற்ற - அனுபவித்தவற்றை, விட்டு அகல கில்லாத - விட்டு நீங்கமாட்டாத, வேட்கையும் - விருப்ப