பக்கம் எண் :

54

மும்; கட்டிய - (அறிவுடையோரால்) யாக்கப்பட்ட செய்யுள்களின், மெயந்நிலை - பொருளின் உண்மை நிலையை, காணா வெகுளியும் - அறியாத சினமும்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும்; தம் நெய்யில் - (ஆடு முதலானவை) தம்மிடத்துப் பிறந்த நெய்யிலே, தாம் பொரியும் ஆறு - தாம் பொரிகின்ற வகை போல எவரிடத்துப் பிறந்தனவோ அவரைத் தம்மில் வேவச் செய்வனவாம்; (எ-று.)

(க-ரை.) நெஞ்சில் எஞ்சா அச்சமும், நீக்க மாட்டாத வேட்கையும், உண்மை யுணராமையா லுண்டாகும் சினமும் ஒருவனுக்கு மிகுந்த வருத்தத்தைச் செய்வனவாம்.

அலைகடல் : வினைத்தொகை. கடலின் : இன் : ஐந்தனுருபு, ஒப்புப் பொருள், ஆர்வு : தொழிலாகுபெயர். கட்டிய மெய்ந்நிலை என்பதற்குப் பெரியோரால் உறுதியாகத் தழுவப்பட்ட மெய்யினது நிலை எனினுமாம். ஆடு முதலானவை : இசையெச்சம். அகலகில்லாத : இதில் கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை.

(65)

 66. கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்
சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய
கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும்
சால்போடு பட்ட தில.

(இ-ள்.) கொழுநனை - கணவனை, இல்லாள் - இல்லாதவளது. கறையும் - மாதவிடாயும்; வழிநிற்கும் - தன் ஏவலின் வழியில் நிற்கின்ற, சிறு ஆள் - சிற்றளை, இல்லாதான் - இல்லாதவனுடைய, கை மோதிரம் - கைவிரல் அணிந்த மோதிரமும், பற்றிய - தான் மேற்கொண்ட, கோல் - ஆளும் முறை, கோடி - தப்பி, வாழும் அரசனும் - வாழ்கின்ற அரசனும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும்; சால்போடு - நிறையோடு, பட்டது இல - பொருந்திய சிறப்புடையன அல்லவாம்; (எ-று.)

(க-ரை.) புருடன் இல்லாதவள் பூப்பும் சிற்றாளில்லான் செங்கையாழியும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவை என்பது.

கொழுநன் - மனையாளுக்கு உறுதியாகிய துணையாயுள்ளவன். கறை - கறுப்பு, கோடு : முதனிலை; இகரம் வினையெச்ச விகுதி, சால்பு - நிறைவு; அஃதாவது அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையாகிய ஐந்து நற்குணங்களும் நிறைந்தது.