பக்கம் எண் :

55

கொழுநனையில்லாள் நலனும் பாடங்கொள்ளின், நலன் என்பது அழகாம்.

(66)

 67. எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பியல் தொழும்பும்
செயிர்நிற்குஞ் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப
முந்தைப் பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்த தில்.

(இ-ள்.) எதிர் நிற்கும் - (தாம் சினந்தால்) தம் எதிர்நின்று பேசும்; பெண்ணும் - மனையாளும்; இயல்பு இல் - ஒழுக்கமில்லாத, தொழும்பும் - ஏவலாளும்; செயிர் - பகை, நிற்கும் - கெடாது நிற்கும், சுற்றமும் - உறவினரும், ஆகி - ஆய் நின்று. முந்தை - முற்பிறப்பிற் செய்த, பழவினை - பழைய வினை, ஆய் - ஆகும்படி, மயிர்நரைப்ப - முதுமைப் பருவம் வரைக்கும், தின்னும் - மெலியச் செய்யும்; இவை மூன்றும் - இந்த மூன்றுக்கும், நொந்தார் - வருந்தினார், செயக் கிடந்தது - செய்யக்கூடியதாகிய, பரிகாரம் இல் - இல்லை; (எ-று.)

(க-ரை.) கணவனை எதிர்த்து நிற்கும் மனைவியும் நன்னடக்கையில்லா அடிமையும், பகை பாராட்டும் உறவினரும் பழவினைப் பயன்போற் பரிகரிக்கப்படாதவர் என்பது.

தொழும்பு : தொழிலாகு பெயர், செயிர் : குற்றம்; ஈண்டுப் பகை. மயிர் நரைப்ப என்பது முதுமைப் பருவத்தை யுணர்த்த வந்த குறிப்புச் சொல்.

(67)

 68. இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.

(இ-ள்.) இல்லார்க்கு - வறியவர்க்கு, ஒன்று ஒருபொருளை ஈயும் - கொடுக்கும், உடைமையும் - செல்வமும்; இவ்வுலகில் - இவ்வுலகத்தின் பொருள்களின், நில்லாமை - நிலையாமையை, உள்ளும் ஆராய்ந்து அறியும், நெறிப்பாடும் - வழியில் பொருந்துதலும்; எவ்வுயிர்க்கும் - எல்லா வுயிர்க்கும், துன்பு உறுவ - துன்பம் அடைவதற்கு ஏதுவாகிய செய்கைகளை, செய்யாத தூய்மையும் - செய்யாத தூய தன்மையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும்,