பக்கம் எண் :

59

அன்புடையாளெனக் கருதும் காமுகனும் : விரி கடல் ஊடு - பரந்த கடலினடுவில், செல்வானும் - (தக்க கருவியின்றி) பொருளீட்டச் செல்லும் வாணிகனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், அரிய - செய்வதற்கு அரிய பொருள்களை, துணிந்து - பின் வாங்கலின்றி மேற்கொண்டு, வாழ்வார் - வாழ்பவர் போலத் தாழ்பவராவார்; (எ-று.)

(க-ரை.) பிச்சையெடுத்துப் பெரும்பொருள் ஈட்டுதலும், வேசை தன்னிடம் மெய்யன்புடையவளென்று நம்புதலும், வேண்டிய கருவிகளில்லாமல் திரைகடலோடித் திரவியந் தேட முயலுதலும் முடியாத செயல் என்பது.

ஒண்பொருள் - ஒருவனைப் பலருள்ளும் ஒண்மையுடையவனாகச் செய்யவல்ல செல்வம்; செய்வல் : அல் ஈற்றுத் தன்மையொருமை எதிர்கால வினைமுற்று. பரந்தொழுகுதலாவது - உள்ளம் ஒருவனைப் பற்றி நில்லாது பொருள்வளம் மிக்க பலரிடத்தும் செல்லுதல். பாசம் - பற்று; பண்பாகுபெயர். கடலூடு : ஊடு : ஏழனுருபு.

(73)

 74. கொலைநின்று திதின்றொழுகு வானும் பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன்
றீகென் பவனை நகுவானும் இம்மூவர்
யாதுங் கடைப்பிடியா தார்.

(இ-ள்.) கொலைநின்று - கொல்லுந் தொழிலில் நீங்காது நிலைபெற்று, தின்று ஒழுகுவானும் - (ஓருயிரை வதைத்து) அதன் இறைச்சியைத் தின்பவனும்; பெரியவர் - பெரியோர், புல்லுங்கால் - தன்னைத் தழுவும்போது, தான் புல்லும் - (அவரோடொப் பவனாகத் தன்னை மதித்துத்) தானும் அவரை எதிர் தழுவுகின்ற, பேதையும் - அறிவில்லாதவனும்; எனக்கு இல் - எனக்கு இல்லை, ஒன்றுஈக - ஒன்றை (ஒரு பொருளை) ஈயக் கடவாய், என்பவனை - என்று இரக்கின்றவனை, நகுவானும் - இகழ்வானும்; இ மூவர் - (ஆகிய) இம் மூவரும், யாதும் - யாதோர் அறத்தையும், கடைப்பிடியாதார் - உறுதியாகக் கொள்ளாதவராவர்; (எ-று.)

(க-ரை.) கொலைசெய் துண்பதும், பெரியோர் தழுவினால் அவர்க்கு வணக்கஞ் செய்யாது தானும் அவரைத் தழுவுவதும்