(க-ரை.) பழிக்கு கஞ்சாதவனும், கேடுற்றதென்று தவத்தை விட்டவனும், மனையாளுக்குப் பயந்து நடக்கும் கணவனும் உண்ணாது ஒழியத் தக்கவர் என்பது. அஞ்சான் : முற்றெச்சம். பசு, எருது : உவமை யாகுபெயர்கள். நெல் அரிசிக்காகி; அது சோற்றுக்கு ஆயினமையின் இரு மடியாகுபெயர். ‘நெல்லுண்ட நெஞ்சிற்கோர் நோய்' எனப் பாடங் கொள்ளின் நெல்லைத்தின்னநெஞ்சுக் குண்டாகும் துன்பத்தோடு ஒத்தவர் எனப் பொருள் கொள்க. (79) 80. முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. (இ-ள்.) முறை செய்யான் - முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற - அடைந்த, தலைமையும் - தலைமைத் தன்மையும், நெஞ்சில் - மனத்தில், நிறை இலான் - உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட - மேற்கொண்ட தவமும் - தவமும்; நிறை ஒழுக்கம் - குறைவற்ற ஒழுக்கத்தை, தேற்றாதான் - தெளிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் - பெற்ற அழகும்; இவை மூன்றும் - ஆகிய இம் மூன்றும், தூற்றின்கண் - புதலினிடத்து, தூவிய - விதைத்த, வித்து - விதையை யொக்கும்; (எ-று.) (க-ரை.) முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அலுகும் வீண் என்பது. நிறை இரண்டனுள் முன்னது தொழிற்பெயர். பின்னது காலங் கரந்த பெயரெச்சம், தேற்றாதான் : தன்வினை, வினையாலணையும் பெயர். தேறு : முதனிலை. (80) 81. தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். (இ-ள்.) துறைபோல் - (பலருக்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரைக் கொடுக்கும்) துறையினைப் போல, தோள் வழங்கி -
|