பக்கம் எண் :

65

கொள்ளாத : பலவின்பால் வினையாலணையும் பெயர், உள் உருபு மூன்றனுள் முன்னிரண்டும் உருபு மயக்கம். ஆள் : தொழிலாகு பெயர்.

(82)

 83. உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்ப நெறிதூரா வாறு.

(இ-ள்.) உப்பின் - உப்பினது, பெருங்குப்பை - பெரிய குவியல், நீர் படியின் - தன்னில் நீர் படிந்தால், இல் ஆகும் - இல்லாமற் போகும்; நட்பின் கொழுமுளை - நட்பினது செழித்த முளையானது, பொய் வழங்கின் - பொய்யாகிய நெருப்பைப் பெய்தால், இல் ஆகும் - அழிந்துபோம்; செப்பம் உடையார் - நடுவுநிலைமையுடையார், மழை அனையர் - மழை போல எல்லார்க்கும் ஒப்ப உபகரிப்பார்; இ மூன்றும் - நீர் படியாமையும் பொய் வழங்காமையும் மழையை ஒத்தலும் ஆகிய மூன்றும், செப்பநெறி - நல்வழியை, தூரா ஆறு - தூராமைக்குக் காரணமாகிய சாதனங்களாம்; (எ-று.)

(க-ரை.) உப்பின் குவியல் நீர் படியாமையும், நட்பினர் பொய் வழங்காமையும், மழையனையார் செப்பமுடைமையும் நல்வழியைக் கெடுக்கா முறைகள் என்பது.

படியின் : வினையெச்சம். படிதல் - தோய்தல், பொருந்தல், செப்பம் இரண்டனுள் முன்னது பண்பாகுபெயர்; பின்னது பண்புப் பெயர்.

(83)

 84. வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேயமரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார்.

(இ-ள்.) வாய் - நீர் வரும்வழி, நன்கு அமையாக் குளனும் - நன்றாக அமைந்திராத குளமும்; வயிறு ஆர - தன் வயிறு நிரம்பும்படி, தாய்முலை உண்ணா - தாயின் முலைப்பாலை உண்ணாத, குழவியும் - குழந்தையும்; சேய் மரபில் - உயர்ந்த முறைமையில், கல்வி மாண்பு - நூல்களைக் கற்றலினது மாட்சிமைப்பட்ட அறிவு, இல்லாத மாந்தரும் - இல்லாத மனிதரும்; இ மூவர் - ஆகிய இம்