மரபிற்று : குறிப்பு வினைமுற்று; குறிப்பு வினையாலணையும் பெயருமாம். உள் பொருள் - உண்மையாகிய பொருள் : பண்புத்தொகை - முட்டு - முட்டுதல் : முதனிலைத் தொழிற்பெயர். (85) 86. அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல் நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும் குற்றந் தரூஉம் பகை. (இ-ள்.) அன்பு பெருந்தளை - அன்பினாலாகிய பெருந்தளையினது, யாப்பு - கட்டு, நெகிழ்ந்து ஒழிதல் - தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும்; கற்பு - கல்வியாகிய, பெரும்புணை - பெரிய தெப்பத்தை, காதலின் - பொருள் முதலியவற்றின் விருப்பினால், கை விடுதல் - முற்றும் விட்டுவிடுதலும்; நட்பின் - ஒருவரிடத்தில் வைத்த நட்பினால், நயம் நீர்மை - நீதித் தன்மையினின்று, நீங்கல் - நீங்குதலும், இவை மூன்றும் - ஆகிய இவை மூன்றும், குற்றம் தரூஉம் - (ஒருவனுக்குக்) குற்றங்களை விளைக்கின்ற, பகை - பகைகளாம்; (எ-று.) (க-ரை.) உயிரிடத்தில் அன்பற்றிருப்பதும், பொருட்பற்றால் கல்வியை விடுதலும்; நட்பினால் ஒருபாற் கோடுதலும் பகைபோற் குற்றந் தருவன என்பது. அற்புத் தளை : மூன்றும் வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்க தொகை; அன்பாகிய தளையெனின் பண்புத்தொகையாம். தளை : முதனிலைத் தொழிலாகு பெயர். கல்வி, ஒருவனை அறிவு நூல்களை யுணர்ந்து பொருளியலறிந்து பிறவிக் கடலைக் கடந்து வீடுபெறச் செய்வதால், பெரும்புணை யென உருவகிக்கப் பட்டது. குற்றம் - இருமைப் பயனு மிழத்தல் - தரூஉம் : செய்யுளிசைநிறை யளபெடை. (86) 87. கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக் ககன்ற இனம் புகுவானும் இருந்து விழுநிதி குன்றுவிப் பானுமிம் - மூவர் முழுமக்க ளாகற்பா லார். (இ-ள்.) கொல்வது - (ஒருயிரைக்) கொல்வதற்கு, தான் அஞ்சான் - தான் அஞ்சாதவனாகி, வேண்டலும் - அதனைச் செய்ய விரும்புதலும்; கல்விக்கு -; அகன்ற - நீக்கமாகிய, இனம் - கூட்
|