பக்கம் எண் :

68

டத்திலே, புகுவானும் - நுழைகின்றவனும்; இருந்து - (ஒரு முயற்சியும்) செய்யாதவனா யிருந்து, விழு நிதி - (முன்னுள்ள) பெருஞ் செல்வத்தை, குன்றுவிப்பானும் - (செலவு செய்து) குறைவிப்பவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், முழுமக்கள் - மூடர்கள், ஆகல்பாலர் - ஆகுதலாகிய தன்மையை யுடையார்; (ஏ-று.)

(க-ரை.) அஞ்சாது ஓருயிரைக் கொலை புரியக் கருதுவதும், படிப்பிற் பற்றற்றவரோடு சேர்வதும், முன்னோர் பொருளைப் பெருக்காமல் செலவழிப்பதும் மூடர் செய்கை என்பதாம்.

கொல்வது : தொழிற்பெயர். அஞ்சான் : முற்றெச்சம். கல்விக்கு : கு உருபு நீக்கப் பொருளில் வந்தது. அறிவின்மையால் மக்கட்டன்மையில் குறைந்தவரை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு. இதை இலக்கணமுடையதாகக் கொண்டு அறிவு நுழையப் புரையில்லாத மக்கள் எனப் பொருள் கூறுவாருமுண்டு. பாலார் : பண்படியாகப் பிறந்த பெயர்.

(87)

 88. பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு.

(இ-ள்.) பிணி - நோயானது, தன்னை - , தின்னுங்கால் - வருத்தும்போது, தான் வருந்தும் ஆறும் - (ஒருவன்) தான் (அதற்கு) வருத்தப்படும் வகையும்; பெருங்கூற்று - பெரிய எமன் உயிர் உண்ணும் ஆறும் - உயிரைக் கொண்டுபோக வருத்தும் வகையும்; பிணை - (சுற்றத்தோர் முதலியோர்) வந்து சேர்வதற்குக் காரணமாகிய, செல்வம் - செல்வமானது, மாண்பு இன்று - நிலையில்லாமல், இயங்கல் ஆறும் - செல்லும் வகையும்; இவைமூன்றும் - ஆகிய இம் மூன்றும், புணையின் - (ஒருவனுக்குப் பிறவிப் பெருங்கடற்கு) மரக்கலமாயுள்ள மனத்தின், நிலை - நிலையை, கலக்கும் - கலக்குகின்ற, ஆறு - வழிகளாம்; (எ-று.)

(க-ரை.) நோயால் வருந்துவதும், உயிர்போக நோவதும் செல்வம் அழிவதும் மனவுறுதியைக் கலக்குவன என்பது.

பிணி : கருத்தாப் பொருள் உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்ட தொழிற்பெயர். மாண்பு - நிலைமை. இயங்கல் என்பதன்