பக்கம் எண் :

74

தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசனும் உள்ள இடத்தில் மழை தவறாது பெய்யும் என்பது.

பெண்டு ஆட்டி - பெண்டு ஆம் தன்மையை ஆளுபவள், தவசி செய்கையாவன : மனம் பொறிவழியிற் போகாமல் நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்குதல், மழை பனி நீர் நிலை வெயில் இவற்றில் நிற்றல் முதலியவைகளை மேற்கொண்டு, அவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல்.

(96)

 97. ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.

(இ-ள்.) ஐங்குரவர் - ஐந்து பெரியோர்களுடைய, ஆணை - கட்டளையை, மறுத்தலும் - மறுத்து நடத்தலும்; ஆர்வு உற்ற - விரும்பிய, எஞ்சாத - குறையாமல் வளர்கின்ற; நட்பினுள் - நட்புச் செய்வாரிடத்து, பொய் வழக்கும் - பொய் பேசுதலும்; நெஞ்சு அமர்ந்த (தன்னை) மனத்தால் விரும்பிய, கற்பு உடையாளை - கற்புடைய மனைவியை, துறத்தலும் - விடுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், நல்புடை - அறத்தினது, இல்ஆளர் - இன்மையை ஆளுதலுடையாரது, தொழில் தொழில்களாம்; (எ-று.)

(க-ரை.) ஐங்குரவர் ஆணைப்படி நடவாமையும், நண்பனிடத்துப் பொய் சொல்லுதலும், கற்புடை மனைவியைத் துறத்தலும் பாவச் செய்கைகள் என்பது.

ஐங்குரவர் அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் நெஞ்சு : இடவாகு பெயர். வழக்கு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். துறத்தல் - முற்றிலும் நீக்கிவிடுதல்.

(97)

 98. செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ - வேள்விச் செந்தீயை, முதல்வர் - வளர்கின்ற அந்தணர்கள், அறம் - தமக்குரிய அறத்தை, நினைந்து